ஆர்யா அடங்கிட்டாரு விஜய் கிளம்பிட்டாரு…
அடுத்த கட்ட நடிகர்களோடு ‘ஜெல்’ ஆகிற விஷயத்தில் எப்பவும் தள்ளியே நிற்பவர் அஜீத். சாயாங்கால ‘பளக்க வளக்கம்’ அவருக்கு இல்லை என்பதுதான் இந்த விஷயத்தில் ஆகப்பெரிய திண்டுக்கல் பூட்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்யை ஈஸியாக சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கூட அரட்டையடிக்க முடிகிறதாம் சில ஹீரோக்களுக்கு. பொது இடங்களில்தான் அவர் அப்படி. தனியாக அவரை சந்திக்கும் போது மனம் விட்டு பேசுவார். பெரும் குரலெடுத்து சிரிப்பார் என்றெல்லாம் அதிசயம் கிளப்புகிறார்கள் சில இளம் ஹீரோக்கள். அதிலும் இப்போது பெரிய பெரிய மாற்றமாம். அதென்ன?
பல முன்னணி நடிகர்களுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் ஷுட்டிங் வைத்தால் பிடிக்காது. அவர்களது ஒரே வடிகால், அந்தி நேர குடிகால்தான். அதற்காகவே விழுந்தடித்துக் கொண்டு ஓடுவார்கள்!. பிரேம்ஜி, வெங்கட்பிரபு, போன்றவர்கள் அந்த விஷயத்தில் வெளுத்ததெல்லாம் ‘பீர்’ராகிக் கிடக்கிறார்கள் என்றால், ஆர்யாவின் பாணியே வேறு. ஜீவா, ஜித்தன் ரமேஷ், விஷால், விஷ்ணுவோடு கூடி விடுவார். அரட்டை அரட்டை மேலும் அரட்டை என்று போகும் அந்த நேரங்கள். இப்போது இங்குதான் ஸ்பீட் பிரேக்கர்.
சாயங்காலங்களில் ஆர்யா வெளியில் வருவதில்லை. ‘போனா குடிக்க கூப்டுறானுங்கடா’ என்கிறாராம் தனக்கு நெருக்கமானவர்களிடம். வீட்டில் பெண் பார்த்து வருவது இன்னொரு காரணம். ஆனால் ஆர்யாவின் இடத்தை விஜய் பிடிப்பார் என்கிறார்கள். ம்ஹும்… அந்த மேட்டரில் இல்லை. வெறும் அரட்டை விஷயத்தில்தான். அடுத்தகட்ட செட்டோடு கிளம்பும் அவர் நள்ளிரவு வரைக்கும் அரட்டையை தொடர்கிறாராம். ரிசர்வ்டு டைப் என்று சொல்லப்பட்ட அவர் இப்படி மாறுவார்னு நாங்க எதிர்பார்க்கவேயில்ல. ‘அண்ணன் எப்பவும் அண்ணன்தான்’ என்று குதுகலிக்கிறார்கள் அந்த பாக்கியம் பெற்றுவரும் இளம் செட்டுகள்.
Vijay bonds well with his second rung heroes!
Vijay has shed his image of being aloof in the industry. Till couple of years ago he would not been seen spending time with his colleagues in the industry. One can always see Arya, Vishal, Jithan Ramesh, Jiva and Vishnu partying together late in the evening hours and spend good time. Barring from Jiva, it was more or less a “bachelors’ party”. Ajith has no partying habits and so he would not mingle with upcoming heroes in the industry, who more or less habitually spend time partying in clubs and restaurants.
Vijay is now seen in the company of young heroes in the industry and spends his time well. Though he too would not like to ‘party’, but chit chats well with his colleagues, says K-town sources. Sources say that Vijay who normally not willing to open up has of late started speaking his mind and laughs aloud in the open which is quite contrary to his earlier nature. The two young stars who spent some quality time with Vijay was full of praise for Vijay.