ஆர்யா கடை பிரியாணி ஆறிப்போய் நாளாச்சு

ஆர்யா கடை பிரியாணி ஆறிப்போய் நாளாச்சு என்கிறார்கள். பூஜாவில் ஆரம்பித்தது இந்த பிரியாணி விளம்பரம். அதற்கப்புறம் அவர் படத்தில் நடிக்கும் எல்லா ஹீரோயின்களுக்கும் ஆர்யா வீட்டிலிருந்து பிரியாணி வரும். அல்லது ஆர்யா வீட்டுக்கே அவர்கள் வருவார்கள். இந்த பிரியாணி உறவில் பட்டை லவங்கம் கிராம்பு என்று மேலும் சில வாசனை ஐட்டங்களை தெளித்து கிசுகிசுக்கு வழி ஏற்படுத்திவிடுவார் அவர். ஊருக்கே தெரிந்த இந்த களேபரத்தை மறுபடியும் ஞாபகப்படுத்துவானேன்? லேட்டஸ்ட் நிலவரத்திற்கு வருவோம்.

நயன்தாரா ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பதை வம்படியாக தவிர்த்தார். அனுஷ்கா சென்னை பிளைட்டை பிடித்து வெகு நாளாகிவிட்டது. நஸ்ரியாவுக்கு நிச்சயதார்த்தமே முடிஞ்சாச்சு. இப்படி எல்லா வீதிகளும் முட்டு சந்தாக போனதால் அவ்ளோ பெரிய காதல் மன்னனான ஆர்யாவுக்கே பேட்டரி காலி. வேறு வழியில்லாமல் இப்போது அவரே வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார். ‘வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. அம்மாவுக்கு யாரை பிடிச்சிருக்கோ, அவங்களோடதான் நிக்காஹ்’ என்று கூறிவருகிறார்.

இப்போதெல்லாம் எந்த விழாவிலும் அவரை பார்க்க முடிவதில்லை. அப்படி வருகிறவர்களும் ஆர்யா மீது பொறாமை கொண்டு உதிர்க்கும் வயிற்றெரிச்சல் வார்த்தைகளுக்கும் வழியில்லை. பட்… மேடைகளில் இருந்த சுவாரஸ்யமும் இப்போது இல்லாமலே போய்விட்டது.

Arya on his wedding plans!

Arya who was conferred ‘Kadhal Mannan’ by none other than Kamal Hassan, passing on the mantle to him, has now mellowed and subdued. He is not seeing in parties or in any events. He may be busy with his shoots for Purambokku and Meagaman, but he had attended the events while shooting earlier. The turnaround is perhaps he is inching towards marital status. In a recent interview he had indicated that his family elders are looking for a suitable bride for the handsome hero. ‘Whoever they decide I will marry’, says Arya emphatically. Advance congratulations Arya!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
”INAM” NEW PHOTOS

[nggallery id=164]

Close