ஆர்யா ரசிகரின் மண்டை உடைப்பு…. அஜீத் ரசிகர் ஆவேசம்! இரு ஹீரோக்களும் எரிச்சல்!

‘காஜா பீடி ஓனர், காஜா பீடி பிடிப்பதில்லை’ என்கிற ஒருவரி சித்தாந்தத்தோடு இந்த செய்தியை அணுகினால், எந்த ரசிகருக்கும் உச்சி மண்டையில் உஷ்ணம் வராது. பீடியை வைத்துதான் சொகுசான வாழ்க்கை என்று தெரிந்தும், பீடியை விரும்பாத முதலாளி மாதிரிதான் ரசிகர்களை விரும்பாத ஹீரோக்களும் இருக்கிறார்கள். ‘மன்றத்தை கலைச்சுட்டேன்’ என்று கூறிய நடிகர், மன்றம் சார்பில் நடந்த கைகலப்பு பற்றி உதிர்த்த ஒரு சொல்தான் இந்த செய்தியின் கடைசி வரி.

தென் மாவட்டம் ஒன்றில் ஆரம்பம் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆர்யா ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தார்கள். படத்தில் ஆர்யாவும் அஜீத்தும் மோதிக் கொள்ளும் காட்சியில் உணர்ச்சிவசப்பட்ட அஜீத் ரசிகர், ஆர்யாவை ஏச, யாரோ யாரையோ ஏசிட்டு போறாங்க. எனக்கென்ன என்று இருக்க முடியாத அவரது ரத்தம் கொதிக்க, காரசாரமான மோதல் நடந்தது. கைகலப்பு போதாது என்று அங்கிருந்த கட்டையை எடுத்துக் கொண்டு மோதினார்களாம். இதில் ஆர்யா ரசிகருக்கு மண்டை உடைந்து சூடு சுரணையுள்ள ரத்தம் அவுன்ஸ் கணக்கில் வழிந்தோடியதாம்.

அருகிலிருந்த போலீஸ் வந்து இருவரையும் அள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்கு ஓடி எப்.ஐ.ஆரும் பதிவு செய்துவிட்டது. பிரச்சனையை சென்னை வரைக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். சொந்த மேட்டருக்கே(?) நேரம் கிடைக்காமல் ஓவர் டைமில் கலர் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்யா, அட போங்கய்யா என்று காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அஜீத்?

இதையெல்லாம் ஏன்யா என் காதுக்கு கொண்டு வர்றீங்க? காச கொடுத்துட்டு படத்தை பார்த்தமா, சைலண்ட்டா வீட்டுக்கு போனமான்னு இல்லாம…இவனுங்க வேற. ‘பைத்தியாக்காரப் பசங்க’ என்றாராம்.

Ajith – Arya fans clash inside the theatre

A clash was erupted in a theatre in a southern district of Tamil Nadu, where Arrambam was running. In a scene in the film where Ajith and Arya clash, an emotional Ajith fan abused Arya. Hearing that, Arya fan entered in to an argument which resulted in a clash of the fans. In the melee Arya fan was struck on the head with a stick. Police was called in and an FIR was registered. The news reached Chennai, where Arya on hearing it, ignored it. On the other hand Ajith ignored the incident saying the fans should just enjoy the film and go off peacefully. Both the stars have not reacted to the incident should be a pointer to the fans that they should desist from such unruly behaviour. One should not expect the heroes to speak up against the other person, as it is just cinema and not even politics.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முத்தக்காட்சிக்கு மூக்குதான் தடையா?

கும்கி வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபுவும், எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சரவணனும் கூட்டு சேரும் படம் இவன் வேற மாதிரி. படமும் வேற மாதிரி...

Close