ஆஸ்திரேலியாவில் இரு தலை ஓர் உடலுடன் பிறந்த இரட்டை குழந்தை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி-ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது என இவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரு தலைகளுடன் கூடிய சமச்சீரான முகங்களும், ஓருடலும் கொண்ட பெண் குழந்தைகள் கருவில் இருப்பது தெரிந்தது. குழந்தைகளின் வடிவத்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்தாலும் தம்பதியர் இருவரும் எந்த வித அதிர்ச்சியும் இன்றி கடந்த 8 ந்தேதி தங்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த அக்குழந்தைகளுக்கு பெய்த் என்றும், ஹோப் எனவும் அத்தம்பதியர் பெயர் வைத்துள்ளனர். இரு மூளைகள் மற்றும் ஒரு மூளை தண்டுடன் இக்குழந்தைகள் பிறந்துள்ளன. எங்கள் குழந்தைக்கு ஒரு உடல் மட்டுமே இருந்தாலும் நாங்கள் அவர்களை இரட்டையர் என்று தான் அழைப்போம். அந்த அளவுக்கு நாங்கள் அவர்களை விரும்புகிறோம் என அத்தம்பதியர் தெரிவித்தனர்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல இருவரும் ஆர்வத்துடன் உள்ளனர். இம்மாதிரி இதுவரை 35 பிறப்புகள் பிறந்திருந்தாலும் அதில் ஒருவர் கூட உயிர் பிழைத்ததில்லை. ஆனால் யங் மற்றும் ஹோவி தம்பதியர் தங்கள் குழந்தைகள் நன்றாகவும் சுகமாகவும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூரியின் பாலிடிக்ஸ் சுருண்டு போன இயக்குனர்

‘சேட்டை’ என்ற துர்நாற்ற படத்தை எடுத்தவர்தான் டைரக்டர் கண்ணன். அதற்கு முன்பாக அவர் எடுத்த ஜெயம்கொண்டான் படத்தையெல்லாம் இந்த சேட்டை வந்து காலி பண்ணிய கதையை விலாவாரியாக...

Close