இங்கிலாந்து குட்டி இளவரசனின் புகைப்படம் வெளியானது

0
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்பு பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டைன் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்தனர். 41 குண்டுகள் முழங்க புதிய இளவரசருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளவரசர் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்ட மகனின் பிறப்புக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பதை கேத் மிடில்டன் தவிர்த்து வந்தார். இதனால், தங்கள் நாட்டின் குட்டி இளவரசனான ஜார்ஜின் முகத்தை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியருடன் 8 மாத குழந்தையாக இருக்கும் ஜார்ஜ் இடம்பெற்றுள்ள புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக ஜார்ஜை தூக்கி வைத்தபடி பெற்றொர் ‘போஸ்’ கொடுக்க, கேமராவைப் பற்றி கவலைப்படாத குட்டி இளவரசன், தங்களது வளர்ப்பு நாயை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.