இங்கு நடிகைகளுக்கு வேலை இல்லை… புத்தம்புதுசாக ஒரு துணிக்கடை

சினிமாவில் ஜட்டி பிராவோடு திரியும் நடிகைகளை கூட பொங்கல் தீபாவளி தருணங்களில் மங்களகரமாக பட்டுப்புடவை அணிவித்து புண்ணியத்தை கட்டிக் கொள்வது தி.நகர் துணிக்கடை வியாபாரிகள்தான். ஒரு கூட்டமே நடிகைகள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களும் தமன்னா புடவை கொடுங்க, அனுஷ்கா பாவாடை கொடுங்க என்று வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட நடிகைகள் வாங்குகிற சம்பளத்தை கேட்டால், இருக்கிற துணியையெல்லாம் கிழித்துக் கொண்டு ஓடுகிற நிலைமைக்கு ஆளாக வேண்டியதுதான்.

இப்படி கோடி கோடியாக அவர்களுக்கு கொட்டியழுகிற பணமெல்லாம் யார் தலையில் விடியும்? கஸ்டமர்ஸ் தலையில்தான். ஆனால் சமீபத்தில் ஒரு துணிக்கடை திறக்கப்பட்டிருக்கிறது மைலாப்பூரில். காஞ்சிபுரத்தில் பட்டுக்கு பெயர் போன வர மஹாலக்ஷ்மி பட்டுப் புடவை ஷோரும்தான் அது. சென்னையிலும் ஒரு கிளை வேண்டும் என்று விரும்பிய பட்டுப்புடவை பிரியைகளுக்காக இங்கே திறந்திருக்கிறார்கள்.

‘ஏங்க… நீங்க ஏதும் நடிகைகளை வைத்து கமர்ஷியல் ஆட்ஸ் பண்ணலையா?’ என்று இதன் துவக்கவிழா தருணத்தில் நிருபர்கள் கேட்கப்போக, கொஞ்சம் அர்த்தபூர்வமாக சிரித்துவிட்டு பேச தொடங்கினார் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பிரசாத் சாலவாடி. அதுக்கு செலவு பண்ற பணத்தை பட்டுப்புடவையில்தான் வைக்கணும். அதனால் நாங்க அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. அடக்க விலையை விட சற்று நியாயமான லாபத்தோடு விற்கிறோம். அதனால் வெட்டி செலவை தவிர்க்கிறோம் என்றார் அவர்.

2400 சதுர அடியில் அமைந்துள்ள சென்னை கிளையில், ரூ.799 முதல் ரூ.2 லட்சம் வரை, அனைவருக்கும் ஏற்ற விலையில் புடவைகள் இருக்கிறதாம் இங்கே. இந்த துணிக்கடைய தமிழக கவர்னர் ரோசைய்யா துவங்கி வைத்திருக்கிறார்.

பட்டுக்கு ஆசைப்பட்டவர்கள் ஒரு எட்டு வரமஹாலட்சுயை பார்த்துட்டு வாங்களேன்….

Vara Mahalakshmi Silks consciously avoids actresses Ads?

Vara Mahalakshmi Silks a popular silk showroom in Kanchipuram have opened a branch in Mylapore, Chennai. Tamil Nadu Governor K. Rosaiah inaugurated the spacious showroom spanning about 2400 sq.ft with parking facilities. They have silk sarees ranging from Rs.799 to Rs.2 lakhs catering to all sections of the people.

When asked why they have not roped in popular actresses for giving advertisement to the showroom, Prasad Salwadi the Managing Director of the showroom said that they have consciously avoided ads by actresses as the cost of such ads would be added to the sarees burdening the customers with higher prices. “We are selling these sarees with reasonable price tags by cutting down unnecessary expenses”, Prasad reasoned out.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டாராம்… எஸ்.வி.சேகர் ஆணித்தரம்

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சேனல் ஒன்றில் ஒரு முக்கியமான விவாதம் நடந்தது. நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து...

Close