இசைஞானி இளையராஜாவுக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி
இசைஞானி இளையராஜா இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் அவர் வழக்கம் போல பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். இம்மாதம் இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் ஒரு இன்னிசை நிகழ்ச்சி அவரது தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ரிகர்சலில் அவர் இருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அவசரம் அவசரமாக கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்களாம். அதற்கு முன்னதாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் மிகவும் மைல்ட் அட்டாக் என்று இதை குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த இளையராஜாவின் உறவினர்களும் நண்பர்களும் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள்.
Isaignani Ilayaraja admitted to hospital after heart attack
Isaignani Ilayaraja has been admitted in the hospital today morning following a mild heart attack. He has reportedly complained of mild chest pain and he was immediately rushed to Apollo Hospital. He was in the midst of a rehearsal for the program which he was to perform in Singapore, in this month end.
The doctors are giving treatment to him and his condition is stable now. The doctors seems to have suggested angiogram. They have also stated that it is just a mild attack and he will be discharged within a couple of days. We wish the Maestro a speedy recovery and a good health.
nalam pera vendugren…