இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்துள்ளார்.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு. நெடுஞ்சாலை,பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி,  கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா –  2 போன்ற ஹிட்  படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்போது  அசுரகுலம், மானே தேனே பேயே, கிட்ணா மற்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அசுரகுலம் படத்தில் “ பொல்லாத பொம்பள” என்ற பாடலை நடிகர் தம்பி ராமைய்யாவை பாட வைத்திருக்கிறார்.

இதுவரை மெம்மையான பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சத்யா காஞ்சனா – 2 படத்தில் இடம்பெற்று ஹிட்டான “ சில்லாட்ட பில்லாட்ட” பாடல் மூலம் தனக்கு  குத்து பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்த இளையராஜா, கார்த்திக் ராஜா இருவரும் படத்தின் Re recording ரொம்ம நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள்.                                                           இசைஞானி இளையராஜா பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் இன்னும் சிறப்பாக இசையமைக்க ஊக்கமாகவும் இருந்தது என்கிறார் சத்யா.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இசை ஆல்பம் ஒன்றையும்  உருவாக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் கிரிஷ் –  சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் “

பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” இந்த படத்தில் பாடகர் கிரிஷ்...

Close