இசைஞானி கூடத்தில் இயக்குனர் பாலா!

இசைஞானி இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 படங்கள். எல்லாமே பிலிமில் எடுக்கப்பட்டது. இப்போதுதான் டிஜிட்டல் யுகமாகிவிட்டதே, அப்படியென்றால் அந்த படங்களை அவர் எப்போது எடுத்திருப்பார் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். அவரது இந்த புகைப்பட பாய்ச்சல் பல புகைப்பட கலைஞர்களையே கூட கவர்ந்ததுதான் ஆச்சர்யம்.

மேலும் ஒரு ஆச்சர்யம், அவர் இந்த புகைப்படங்களை காரை விட்டு இறங்காமல் காரிலேயே அமர்ந்தபடி எடுத்திருந்ததுதான். ‘நான் எடுத்த படங்களை விட எடுக்காமல் விட்ட அழகான சந்தர்ப்பங்கள்தான் அதிகம்’ என்றார் அவர். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்த கண்காட்சியில் பதிலளித்தவர், ஒரு கேள்விக்கு சுள்ளென்று ஒரு பதிலை தர அரங்கு நிறைந்த மவுனம் அங்கே. ‘நீங்க இப்படி புகைப்படம் எடுக்க ஆர்வமாக முனைந்த நேரத்தில், ‘இசையமைப்பாளராக பிசியா இருக்கும் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ன்னு யாராவது டிஸ்கரேஜ் பண்ணியிருப்பாங்களே?’ இதுதான் கேள்வி. அதற்கு ராஜா இப்படி பதில் சொன்னார். ‘ஏன்… இசையே வேண்டாத வேலைதான்!’

ராஜா பதில் சொல்ல ஆரம்பித்தால் அதில் வயலின் ஓசையை விட தாரை தப்பட்டை முழக்கம்தான் அதிகம் இருக்கும்.

அப்படியே இன்னொரு செய்தி. இந்த கண்காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவை முன்னிட்டு மேலும் பத்து நாட்கள் கண்காட்சியை நீட்டிருந்தார்கள். ஒருநாள் இயக்குனர் பாலா வந்திருந்ததுடன், ராஜா எடுத்த ஒரு புகைப்படத்தை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டார்.

Ilayaraja exhibits photos taken by him for public

Ilayaraja is not only master in music, but he has equally good interest in photography too. This was found out in the photos he has exhibited for public. There were amazing pictures taken by him sitting inside the car. “I have missed out a lot of pictures which are more than the one I have captured” said Ilayaraja to the reporters. When asked if he has been discouraged when he was taking photos, he shot back saying even his music was also so. Due to the good public response the exhibition has been extended to by another 10 days. Meanwhile director Bala too visited the exhibition and fascinated by a photo which he has captured in his mobile for his archive.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி இன்னும் வாழ்த்து சொல்லவில்லை – பத்மபூஷண் கமல்!

இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று ஒரு சில மாதங்களுக்கு முன் ஆக்ரோஷத்தோடு பேட்டியளித்த கமல்ஹாசனுக்கு அதே இந்தியா கொடுத்த பெருமை இரண்டு. ஒன்று அவரை அப்படி சொல்ல...

Close