இசையமைப்பாளர் ஆகிறார் நடிகர் ஜெய்…
மியூசிக் ரத்தம் சும்மாயிருக்குமா? கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிற ஹீரோவாக வளர்ந்த பிறகும் லேசாக தன் பக்கம் எட்டிப் பார்க்க வைக்கிறது அந்த குடும்பத்துக்கே ராசியாக இருந்த ஆர்மோனியப் பெட்டி. கொஞ்ச நாட்களாக அதில் ட்யூன் போட்டுக் கொண்டிருக்கிறார் ஜெய்.
பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் தம்பி மகன்தான் ஜெய். நடிக்க வருவதற்கு முன் தேவா ஸ்டுடியோவில் மியூசிக் கற்றுக் கொண்டதை இப்போதும் மறக்காமல் தவிக்கிறார். தவிப்பின் துடிப்புதான் இவரை மீண்டும் ஆர்மோனிய பக்கம் நடமாட விட்டிருக்கிறது. பகலெல்லாம் ஷுட்டிங் ஷுட்டிங் என்று பிசியாக இருந்தாலும், இரவில் இந்த பெட்டியை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறாராம். யுவன், பிரேம்ஜி, ஸ்ரீகாந்த் தேவா என்று இவரை சுற்றி மியூசிக் ரத்தங்கள் இருக்கும் போது இவர் மட்டும் மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருந்தால் முன்னோர் ஆவி மன்னிக்குமா? விரைவில் ஜெய்யை ஒரு முழுநேர மியூசிக் டைரக்டராகவும் பார்க்கலாம் என்கிறது கோடம்பாக்கத்திலிருந்து வரும் ஆரோக்கியமான தகவல்கள்.
இவர் போட்ட முதல் ட்யூனை கேட்கிற பாக்கியம் யாருக்கு வாய்க்கிறதோ, இல்லையோ? நஸ்ரியாவுக்கு வாய்க்கும். கேட்டுட்டு அப்படியே அந்த நல்ல ட்யூனை நாட்டுக்கு அறிவிச்சுருங்கம்மா…
Jai may turn to music composer, rehearsing his music skills
Jai, son of popular and veteran music composer Deva’s brother, has music immunised in his blood. Now and then it pushes the young Jai to give attention to music too. It is learnt that he is making tunes with his ‘harmonium’ whenever he is free from shooting. According to sources from Kollywood, he is making efforts to test his music skills by composing music for a film. We wish him all the best and good luck in his efforts!