இடத்தை காப்பாத்திக்கறது எப்படி…? – அஜீத், விக்ரமுக்கு ரஜினி ஆலோசனை

மழைக்கு ஒதுங்குவதற்கு வேறு வேறு இடங்களை வைத்திருக்கிற தமிழ்சினிமா ஹீரோக்கள் பலர், தங்களின் ‘பிழை’க்காக ஒதுங்குவதற்கும் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லம். அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களையும், முக்கிய இயக்குனர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து பேசுகிற வழக்கமுள்ளவர் ரஜினி. அந்த நேரத்தில், ‘சினிமா என்கிற பாதையில் எங்களின் பயணம் சரியாக இருக்கிறதா, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் ரஜினியிடம் அட்வைஸ் கேட்பார்களாம் இவர்கள்.

இப்படி அஜீத்திற்கும் விக்ரமுக்கும் அவர் அட்வைஸ் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற மாபெரும் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்த காலத்தில் ஜெய் சங்கர், விஜயகுமார் போன்றவர்களும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களில் போராடி முன்னுக்கு வந்தது மட்டுமல்லாமல் ஓரிடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்கிற சாமர்த்தியம் ரஜினி கமலுக்கு மட்டுமே இருந்தது.

தலைமுறை மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் ரஜினி-கமல், அஜீத் -விஜய், விக்ரம்-சூர்யா என்று இருவர் இருவராக போட்டியில் இறங்கி கோதாவில் குதிக்கிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. யார் யாரோ நடித்த படங்கள் எல்லாம் நடுவில் வரும். ஹிட் அடிக்கும். அவ்வளவுதான். அதற்கப்புறம் காலம் அவர்களை மறக்கடிக்கும். ஆனால் என்றும் நீங்கா அந்தஸ்துடன் நிகழ்வது அஜீத்- விஜய் மாதிரி ஒரு சிலரே.

ஆனால் இப்போது நிலைமையே வேறு. அடுத்த தலைமுறை இரட்டை ஹீரோக்கள் வரிசையில் வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த தனுஷ்- சிம்புவின் கதி அதோகதியாகிவிட்டது. ஷாம்-ஸ்ரீகாந்த் என்ற இருவரும் தமிழ்சினிமாவை ஒரு ஷேக் பண்ணுவார்கள் என்று எதிர்பார்த்தால், தமிழ்சினிமா இருவருக்கும் கொடுத்த கவுரவத்தை அதுவே பறித்துக் கொள்ளும் சூழல் தானாகவே அமைந்துவிட்டது. அஜீத்-விஜய்-விக்ரம்-சூர்யாவில் விக்ரமும் அவுட் என்கிற நிலைமை மெல்ல மெல்ல தலையெடுத்து வருகிறது.

இவர்கள் எல்லாருக்கும் லைட்டாக ஹார்ட் அட்டாக் கொடுத்து வருகிறார்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்ற இரட்டையர்கள். இவர்களின் வேகமான ஸ்டெப் எங்காவது தடுமாறும் என்று காத்திருக்கும் ஆந்தைகளுக்கு, ரெண்டு கண்ணிலும் கூலிங்கிளாஸ் கொடுத்துவிட்டு அதே கொண்டாட்டத்துடன் நடைபோடுகிறார்கள் இவ்விருவரும்.

இவர்கள் உள்ளே நுழைந்து உருமியடித்தது எந்த தருணத்தில்? முயல் ஆமை கதையில் முயல், தனக்கு வராத உறக்கத்தை வரவழைத்துக் கொண்டு கவிழ்ந்து கிடந்ததே, அந்த மிதப்பான தருணத்தில்தான்…. வருடத்திற்கு நான்கு படங்களில் நடிக்கக் கூடிய கெப்பாசிடி இருந்தும், ரெண்டு படம் போதும் என்கிற அலட்சியமும், கதையை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத சவசவப்பும்தான் அஜீத், விக்ரமுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதுதான் பின்னால் வந்த இவ்விரு புதியவர்களுக்கும் புது ரத்தத்தையும் பாய்ச்சியது.

இது குறித்தெல்லாம் விரிவாக பேசிய ரஜினி, அஜீத், விக்ரம் இருவருக்கும் சொன்ன அட்வைஸ் என்ன?

‘நான்லாம் அப்ப ரெஸ்ட்டுங்குற பேச்சுக்கே இடம் கொடுத்ததில்ல. என் படங்கள் வரிசையா வந்து கொண்டே இருந்துச்சு. நீங்களும் அது மாதிரி வருஷத்துக்கு ஐந்து படமாவது கொடுக்க ட்ரை பண்ணுங்க. அப்படியில்லாமல் போனா நீங்கள் இப்ப இருக்கிற இளைஞர்களின் உலகத்தை விட்டு தள்ளிப் போறதா தானாகவே ஒரு பிம்பம் உருவாகிடும்’ என்றாராம். அதன் விளைவு என்ன தெரியுமா?

விக்ரம் அடுத்த வருடத்தில் ஐந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டார். அதற்கான ஒப்பந்தம் போடுகிற பரபரப்பில் இருக்கிறார். அஜீத்தும் விக்ரமை பின் தொடர்ந்தால் ஆச்சர்யமில்லை.

எது எப்படியோ? இந்த
ஹீரோக்களின் ரசிகர்கள் இவ்விருவரது மனக் குகையில் புகுந்து மெர்க்குரி விளக்குப் போட்ட ரஜினிக்குதான் நன்றி சொல்லணும்…

 

Rajini advises Ajith and Vikram to secure their spots

It is a very common feature of late, the bright stars and talented directors and film makers visit Rajini’s home to seek advise and suggestions – whether on performance or on improvement or development or about a project proposal or on some problems that has been plauging them or the industry. Sometimes, Rajini too calls those whom he thinks can have future and talk to them. It is on this premise, recently, Superstar had a meeting with Ajith and Vikram. Why Ajith and Vikram? It is because, like Rajini, both Ajith and Vikram have no godfathers in the industry and they come up in the film industry on their own strength. Of late, both the actors have decided to reduce their films to one or two a year and leaving a huge gap to others. While Vijay and Surya are able to hook their fans with frequent releases, Dhanush, Vijay Sethupathi and Siva Karthikeyan, thriving on suddent spurt in their popularity thanks to the film scripts they have chosen, it is quite possible they may possibly avail the vacuum willingly created by the Ajith-Vikram duo. It is in this context, Rajini invited them to his house and discussed the issue and also other relevant subjects including the blocking of theatres for new releases in unscurupulous ways. It is learnt that the super star had told the duo not to leave any space for others to grab the opportunity and help themselves to release a minimum of 4-5 films a years and be in the limelight. Possibily seeing light in the advise, Vikram had immediately acted upon the advise, and signed 3 new films and looking to go ahead. Possibly Ajith too would follow the suit, it is hoped. If it happens, then the fans of these stars should thank the superstars to be able to see their idols on screens quite often.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தோண்டப்படும் இலங்கை அமைச்சரின் குடும்பக் கல்லறை

முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்ப மயானத்தை விசேட அதிரடிப்படையினர் தோண்டிக்கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானமே தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கரடியனாறு பொலிஸ்...

Close