இடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி
இடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி கட்டுரை வெளியானது. இதில் அப்செட் ஆன அஞ்சலி நான் எங்கும் ஓடிப்போகவில்லை. யாரையும் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் எனது மெயிலில் தொடர்பு கொண்டால் நான் பதிலளிக்கிறேன் என்று சொன்னதுடன், ஒரு மெயில் அட்ரசையும் கொடுத்துவிட்டார்.
இந்த மெயில் அட்ரசை எல்லா இணையதளங்களும் வெளியிட, கிழிந்தது முண்டா பனியன். பத்திரிகையாளர்களுக்காக தரப்பட்ட இந்த மின்னஞ்சல் முகவரியை ரசிகர்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் போலும். தினந்தோறும் ஏராளமான மெயில்கள் அந்த முகவரிக்கு வந்ததால் அந்த மெயில் முகவரியே ஸ்தம்பித்து அப்படியே ஹேங் ஆகிவிட்டதாம்.
இதை நம்பி அஞ்சலிக்கு மெயில் அனுப்பி காத்திருந்த தமிழ் பத்திரிகையுலக நிருபர்கள் பலரும் இதனால் அப்செட். இவர்கள் மட்டுமா? ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டோம் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி அடுத்த வேலையை பார்க்க போன அஞ்சலியும்தான்.