இது ஆணாதிக்கமாம்… -நஸ்ரியாவுக்கு ஆதரவாக பெண்ணுரிமை முழக்கம்

நஸ்ரியா விவகாரம் இவ்வளவு பெரிய குடைச்சலை கொடுக்கும் என்று இயக்குனர் சற்குணம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது நஸ்ரியாவுக்கு. தனது இடுப்பு பிரதேசத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே இதை கருதும் நஸ்ரியா, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. பகிரங்க மன்னிப்பு கேட்டுட்டு அந்த சீனை படத்திலிருந்தே நீக்குங்க. நான் சமாதானம் ஆகிடுறேன் என்றாராம். நடிகர் சங்கத்தில் இவர் கொடுத்த புகாரை வாங்கி படித்த சங்க நிர்வாகிகள், ஏம்மா… சினிமாவுல இதெல்லாம் சகஜம்மா. ஆத்திரப்படாம முடிவெடு என்று அட்வைஸ் செய்தார்களாம்.

அதோடு விட்டாலும் பரவாயில்லை. நீதான் அந்த இடுப்பு உன்னுது இல்லேன்னு சொல்லி, அது மொத்த மீடியாவுலேயும் வந்துருச்சே. அப்பறம் என்ன என்றார்களாம். இனி இவர்களை நம்பினால் பிரயோஜனம் இல்லை என்று நினைத்த நஸ்ரியா, சென்னை நகர காவல் துறை ஆணையரை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முன் அனுமதி கேட்டாராம்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு நேரம் வழங்கப்பட்டிருக்கிறது. மீடியாக்களின் தள்ளுமூள்ளுகளுக்கு இடையே நஸ்ரியா உதிர்க்க போகும் சில சொற்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கு இழுக்குமோ? காத்திருந்தால் ஏகப்பட்ட சுவாரஸ்யத்தை காதார கேட்கலாம்.

இதற்கிடையில் இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று சற்குணத்தின் சட்டையை பிடிக்கிறார்கள் பெண்ணியவாதிகள். பேஸ்புக்கில் ரணகளமாகிக் கொண்டிருக்கிறது நஸ்ரியாவின் இடுப்பு.

Women’s group come in support of Nazriya

Director Sarkunam nor Naiyaandi team would not have expected that Nazriya’s allegations would turn out to be a bombshell. Nazriya is given an appointment to meet the commissioner of Police by 12 noon today after which she would be meeting the media. It is also said that Nazriya was requested to compromise by Nadigar Sangam on the issue suggesting that she has already proved her innocense through her allegations in FB. Dissatisfied Nazriya approached the Police who have given permission to meet the commissioner in the afternoon. It is also heard that she is ready to withdraw the her complaint with Nadigar Sangam and not approach the police if the film unit openly tender an unqualified apology on the issue. Meanwhile, Women’s right group have come in full support for the young actor alleging male dominance. FB is now an operations theatre tearing apart the Nazriya’s hip portion by all and sundry. With all these, Sargunam and his team should be very happy that his film has received the maximum widest publicity possible, for his film, FREE OF COST, thanks to Nazriya!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கதை இதுதான்… !

ஒரு ஜில்லா மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த ஜில்லாக்களையும் கலக்கும் நோக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ஜில்லா. (ஹ்ம்... ஒவ்வொரு படத்தையும் இப்படிதான் நினைச்சு எடுக்கிறாங்க, ஆனா...

Close