இதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..!

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த வண்டி பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்

அங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான்.

அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னன்னு பார்க்கல. உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்தத்துக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார்.

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி. ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான்.

அது என்னன்னு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தலைவா : நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!

சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண...

Close