இந்தியாவில் மறதி நோய்

இந்தியாவில் மறதி நோயால் 6.40 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அல்சைமர் (மறதி நோய்) தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. டீன் கனகசபை தலைமை வகித்தார். டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக டீன் கனகசபை கூறியதாவது:

இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்) பேர் அல்சைமர் நோயினால் (மறதி நோயால்) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050ம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும். ஞாபகமறதி, முடிவு எடுப்பதில் திணறுவது, உணர்ச்சி வசப்படுவது, சந்தேகம், கோபம், பிடிவாதம் போன்றவை அல்சைமரின் அறிகுறிகள். 60 வயதுக்கு மேல் இந்த நோய் ஏற்படும்.

நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் அல்சைமர் நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளித்து நோய் முற்றாமல் பார்த்து கொள்ளலாம். தியானம், உடற்பயிற்சி, பச்சை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், வெந்தயம், மீன்களை சாப்பிட்டு சுறுசுறுப்புடன் இயங்கினால் அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்க முடியும். 1947ம் ஆண்டில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 47 வயதாக இருந்தது. இதுவே தற்போது 67 வயதாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பொது மருத்துவமனையில் வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டவர்,2 கட்டிடம் 2வது தளத்தில் உள்ள அறை எண் 220ல் ‘நீண்ட நாள் வலியை கட்டுப்படுத்தும் நிலையம்‘ தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடமாடும் வலி குறைக்கும் இயந்திரம் உட்பட ஸி50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் அதிக வலியுடன் கூடிய புற்றுநோயாளிகள், கட்டுப்படுத்த முடியாத வலியால் அவதிப்படும் நோயாளிகள்,

எலும்பு மூட்டு வாத நோயால் கஷ்டப்படும் நோயாளிகள், சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு மற்றும் சாலை விபத்தில் சிக்கி வலியால் துடிக்கும் நோயாளிகளின் வலி கட்டுப்படுத்தப்படும். வலியை கட்டுப்படுத்தும் நிலையம் அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அம்மா இருக்கும்போதே தாவணியை உருவுன சார்தானே நீங்க?

நாக்கால பேசுனா தமிழ், மூக்கால பேசுனா மலையாளம். ஆனால் ‘சேச்சி’ அனுகிருஷ்ணா பேச்சுல அப்படியே தமிழச்சி வாடை. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயினான அனு, இப்படி தமிழச்சியாகவே...

Close