‘ இந்த கோச்சடையான் வேற… ’ முணுமுணுக்கும் ஹீரோக்கள்… முந்திக்கொள்ளும் படங்கள்

சிங்கம் இறுமுனா கூட கர்ஜனை என்று அஞ்சி ஓடுகிற அப்பாவி ஜீவன்களும் இருக்கதானே செய்கிறார்கள்? இது சிங்கத்துக்கான மரியாதை என்பதையும் இந்த நேரத்தில் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். யெஸ்… ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் பரபரப்பாகிவிட்டது தமிழகம். பொதுவாகவே அனிமேஷன் படங்களுக்கு நமது தமிழ்நாட்டில் பெரிய மரியாதை இல்லை. ஏனென்றால் இங்கு குழந்தைகள் சேனலில் இதைவிட பிரமாதமான அனிமேஷன் கதைகள் இலவசமாக கொட்டிக் கிடக்கின்றன. ரஜினியே ஒரு கேரக்டரில் வருவது எப்படி? அவரது உருவத்தில் ஒரு பொம்மை வருவது எப்படி? இந்த வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் லேசாக உதட்டை பிதுக்கியபடிதான் கோச்சடையானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த அசட்டு யூகத்தையெல்லாம் தன் முரட்டு செல்வாக்கால் ரஜினியின் பொம்மை முறியடித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ரஜினி படத்திற்குண்டான மரியாதை அப்படி.

ஏப்ரல் 11 ந் தேதி இந்த படம் வெளிவருகிறது என்பது தெரிந்தவுடன், ஏப்ரலில் வரலாம் என்று முடிவு செய்திருந்த சில முன்னணி நடிகர்களின் படங்களை மார்ச்சிலேயே வெளியிட முடிவெடுத்துவிட்டார்களாம். தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஷாலின் நான் சிவப்பு மனிதன், விமலின் மஞ்சப்பை, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே போன்ற படங்கள்தான் இந்த எஸ்கேப் லிஸ்ட் படங்கள். இத்தனைக்கும் இந்த மார்ச் என்பது சினிமாக்காரர்களுக்கு சனி திசை காலம். ஏனென்றால் அப்போதுதான் எல்லா பள்ளி கல்லுரிகளிலும் மாணவர்களுக்கு தேர்வு நடக்கும். பிப்ரவரி இறுதியிலிருந்தே படிப்பே கதி, புத்தகமே சுதி என்று அதனுள் கிடக்க ஆரம்பிப்பார்கள் அவர்கள். மாணவர்களை நம்பிதான் சினிமா என்கிற நிலையில் பரீட்சை நேரத்தில் விஷப்பரீட்சை வேண்டாம் என்று முடிவெடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்படியிருந்தும் இவர்களை மார்ச்சில் வெளிவர நிர்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது கோச்சடையான்.

அதே நேரத்தில் பல மாதங்களாகவே ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் என்று நம்பப்பட்டு வந்த ஷங்கரின் ‘ஐ’ கதி என்ன? கோச்சடையானுக்காக ஒருபோதும் கவலைப்படாது ஐ. ஆனால் ஐ படத்தை விட கோச்சடையான் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதாலும், ‘கோச்சடையான்’ ஒரே நேரத்தில் நான்கு மாநிலங்களில் வெளியிடப்படுகிற ஐடியாவில் இருப்பதாலும் தமிழ்சினிமாவின் சங்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வேண்டுகோள் வைப்பார்களாம். என்னவென்று? ஏப்ரல் மாத இறுதியில் வாங்களேன் என்று. ரஜினிக்காக ஷங்கர் ஒத்துப்போகலாம். படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஒப்புக் கொள்ள வேண்டுமே?

இதற்கிடையில் வடிவேலு நடித்த புஜபல தெனாலிராமன் படத்தையும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அந்த படத்தையும் தள்ளிப் போட சொல்லி கேட்பார்கள் போலிருக்கிறது. எது எப்படியோ?

ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் சிங்கம் சிங்கிளாதான் வருதுன்னு சொல்றாங்க…

Announcement of Kochadaiiyaan release gives jitters to many heroes and producers?

Finally the makers of Kochadaiiyaan have announced the date of release of the mega budget film Kochadaiiyaan on 11th April. The announcement of the release date of Rajini starrer has given jitters already in Kollywood with popular heroes and their producers are now a worried lot. They have planned to release their films during Tamil New Year and during subsequent weeks in April. Since it is a Rajini’s film no hero or producer would be dare enough to release their film alongside of Rajini’s.

Dhanush’s Velai Illa Pattadhari, Vishal’s Naan Sivappu Manithan, Vemal’s Manja Pai and Siva Karthikeyan’s Maan Karate are some of the films which need to revise their release dates. The heroes of the film suggest to prepone the release of their films in March. However March is always a sterile month as far as BO is concerned as students will be busy with preparations for their exams. Students constitute major contributors for any cinema industry Box Office. Hence producers are not prepared to take the risk of releasing the films in March. But the release of Kochadaiiyaan in early April has forced everyone to either prepone the release of their films in March or push the release in May which means they may have to compete with those films including Kamal’s Vishwaroopam 2, which would be planning to release around May.

Meanwhile director Shankar may also have to rethink the release of his film Ai on 14th April. Though Shankar may accede to the request of Rajini to postpone his film, the producer Aascar may have to accept it as well. Also, Vadivelu’s comeback film Jaga Jala Bhuja Bala Tenaliraman may also hit by Kochadaiiyaan’s storm.

There are other people who say this Rajini starrer may not draw as much focus and audience as it is an animated film, and hence some films can be released during 3rd and 4th week of April. For this some distributors and theatre owners say, whether Rajini is playing live or in animated form, Rajini’s presence is good enough for people to come to theatres to watch film and hence taking risk should be avoided.

It remains to be seen how these heroes, producers, distributors and theatre owners plan their strategy for releasing their films.

As per his popular dialogue “Singam (read Rajini) single-a dhan Varum”, Kochadaiiyaan will come alone on 11th April, as of now.

2 Comments
  1. manikandan says

    காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்க்கு தலைவா…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சீயான் வீட்டு பிரியாணிக்கு சீரகம் வாங்க காசில்லையோ? ஐ பட குடைச்சல்கள்…

ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரித்தால், ‘வண்டியில பாரம், வழியெல்லாம் துயரம்’ என்பது மாதிரியே பிரச்சனைகள் வரும். கார்ப்பரேட் கம்பெனிகள் வருவதற்கு முன்பே கார்ப்பரேட் லெவலில் பணத்தை...

Close