இந்த தடவை ஜெயிச்சுருவேன் ஜெய் ஆகாஷ் நம்பிக்கை

லட்சிய வெறியோடு தமிழ்சினிமாவுக்கு வந்தவர் ஜெய் ஆகாஷ். அவரது லட்சியம் அப்படியே இருக்க, ரசிகர்களுக்குதான் வெறி வந்தது. காரணம் அவர் நடித்த முந்தைய படங்கள் அப்படி. இனி ஜெயிக்காமல் ஓய மாட்டேன் என்ற முடிவோடு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு ‘காதலுக்கு கண்ணில்லை’ படம் என்ன மாதிரி சந்தோஷத்தை கொடுக்கப் போகிறதோ, தெரியவில்லை. ஆனால் அவரை சந்திக்கும்போது சந்தோஷமாக இருந்தார்.

‘ஒரு படம் ஹிட்டாகணும்னா பாடல்கள் ரொம்ப முக்கியம். ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தின் இசையமைப்பாளர்கள் யு.கே.முரளியும், கௌதமும் அருமையான பாடல்களை கொடுத்திருக்காங்க. நிச்சயம் நான் ஜெயிப்பேன்’ என்றார். இந்த யு.கே.முரளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நடத்தி கின்னசிலும் இடம் பிடித்தவர்.

‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தில் டபுள் ஆக்ட் பண்ணியிருக்கிறார் ஆகாஷ். அப்பாவும் மகனுமாக. இருந்தாலும் இந்த படத்தில் இவர் அப்பாவை பழிவாங்கும் மகன். காதல் வயப்பட்டு கெட்டவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படும் ஒருத்தி அவனால் சீரழிக்கப்படுகிறாள். ஆனால் அவளுக்கு பிறக்கும் குழந்தையை அவள் நல்ல முறையில் வளர்த்து பெரிய ஆளாக்குகிறாள். வளர்ந்த ஜெய் ஆகாஷ் அப்பாவை என்ன செய்திருப்பார்? வெள்ளித்திரையில் காண்க என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.

ஜெய் ஆகாஷுக்கு அலிஷா தாஸ், நிஷா என்று இரண்டு ஜோடிகளாம். அப்படின்னா ‘காதலுக்கு கண்ணில்லை’ என்பது கரெக்ட்தான்!

பாண்டிச்சேரி, ஊட்டி, ஹைதராபாத் என்று சுற்றி சுற்றி படமெடுத்திருக்கிறார்கள். அது மாதியே படமும் சுற்றி சுற்றி ஓடினால் தேவலாம்.

Jai Akash determines to succeed with Kadhalukku Kannillai

Despite making efforts to succeed in his film career, so far Jai Akash was a shadow of himself. All his earlier films tanked pushing him into a corner. But his determination to succeed pulls him up again and again. This time he is playing the lead in his upcoming film Kadhalukku Kannillai. He plays a dual role in the film.

Speaking about the film he says he plays a dual role in the film, as father and son. The story revolves around both how the son takes revenge on his father for his mother’s sufferings. Mother driven to the extreme conditions grows up his son and make him successful in his life through her hard work. Having learnt the how she was ill treated by his father, son takes revenge on his father. How he does is the crux of the story, says Jai Akash.

Popular stage music orchestra UK Murali and Gautham are music composers. Jai says, ‘if a film is to succeed it must have good songs. The music composers have given wonderful songs in the film. So I will definitely succeed with this film’ says Jai confidently.

Alisha Dass and Nisha will play the female leads opposite to Jai Akash in the film. The film was shot at Puduchery, Ooty and Hyderabad.

1 Comment
  1. Akshay Raj says

    I’ve seen Jaiakash’s previous films such as Ramakrishna, Guru deva, Amudae, and Sev Vale. They were good films and he is a handsome and Talented hero. Definitely, he will become one of the top hero of Tamil industry.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kadalukku kannillai press meet stills and Synopsis set – 2

[nggallery id=347]

Close