இந்த நெருக்கடியில விஸ்வரூபத்தை வேற வாங்கணுமா? ஷங்கர் கொந்தளிப்பு

மகா மெகா பட்ஜெட் படங்கள் பேங்க் பேலன்சை மட்டுமல்ல, சமயங்களில் ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும். படம் வெளியானால் வட்டியும் முதலுமாக லாபம் கிடைத்தாலும் அதை உருவாக்கி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து தக்காளி ரசமாகிவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அப்படிதான் ஐ உறிஞ்சிக் கொண்டிருக்கிறதாம் ஆஸ்கர் ரவிச்சந்திரனை. ஒரே நேரத்தில் பல படங்களை அவர் தயாரிப்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என்று கருதுகிறாராம் டைரக்டர் ஷங்கர். இது குறித்து அவர் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐ படத்தை நகர்த்தவே ஆன மட்டும் போராட வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் விஸ்வரூபம் படத்தை வாங்கி வெளியிட வேண்டுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கிறதாம். கடந்த சில வாரங்களாகவே ஐ படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். எல்லாம் பைனான்ஸ் பிரச்சனை. கொடைக்கானலில் போடப்பட்ட செட் பனியிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டிருக்க, அந்த செட்டை கலைத்துவிடுங்கள். ஷுட்டிங் போக முடிவெடுத்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சற்று கோபமாகவே ஷங்கர் கூறியதாகவும் தகவல் வருகிறது.

நடுநடுவே இந்த படத்தை மொத்தமாக வாங்கிக் கொள்ளும் ஆசை காட்டுகிறதாம் வடக்கை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று. உங்களால் முடியலேன்னா பேசாம அவங்ககிட்ட கை மாற்றிவிட்டுட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். என்ன சொல்றீங்க என்று ஷங்கர் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இனியும் பொருத்திருந்தால் தனது இத்தனை ஆண்டு கால பெருமையை இவர் ஒருவரே ஏலம் போட்டுவிடுவார் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர், தனக்கு சொந்தமான சில தியேட்டர்களை விற்கும் முடிவை எடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இதற்கிடையே படத்தின் ஹீரோவுக்கு கொடுக்கப்பட்ட செக் ரிட்டர்ன் ஆகிவிட அவரும் கொதிப்பில் இருக்கிறாராம். இப்படி நாலாப்புறமும் பிரச்சனை வாட்டி எடுக்க, கூலாக உருவாகிக் கொண்டிருக்கிறது அத்தனை வெற்றிகளையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கும் ஐ.

….ஹை!

Discomfiture brewing between director and producer!

Director Shankar whenever he directs a film he would go with enormous planning while at the same time he would care less for the expenses as his mission always would be to that the final product should bring in maximum profits as well as to maintain his status in film making. However this attitude is in direct contrast to producers’ attitude who want to minimise the expenses while eyeing for the maximum profit worrying less on the final product.

This exact situation is being played now between director Shankar and producer Aascar Ravichandran. Shankar’s Ai is swallowing mammoth amount of money so far, and the producer is finding it difficult to feed the production line. Hence the project is getting delayed. Shankar seems to have expressed his dismay at the producer saying that the situation has arisen due to producing 5 films at the same time and also planning for distribution of Kamal’s Vishwaroopam 2. This has not bode well with the director. To add salt to the injury, the cheque issued by the producer to the hero of the film returned uncleared.

Meanwhile a famous and popular Bollywood production house is eyeing to buy the complete film and have approached the director. Shankar seems to have suggested the producer if he finds it difficult to manage funds to complete the film, to sell the film in its entirety to the Bollywood production house.

Felt embarrassed at this, Aascar is now contemplating to sell some of his properties to salvage his position and complete the film and release it by himself.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யுவன் பாணி தொடர்கிறது…. இஸ்லாமுக்கு மாறவிருக்கும் இளம் ஹீரோக்கள்

உலக தமிழர்களையெல்லாம் பரபரப்புக்குள்ளாக்கிய யுவன், எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை. அண்மையில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் பிரஸ்மீட்டிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள்...

Close