இந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே?

எங்கே போய் மூக்கை நுழைச்சாலும், அங்கேயும் ஒரு முட்டு சந்து இருக்கே என்று நொந்து கொள்வார் போலிருக்கிறது விஜய். கடந்த சில வருடங்களாகவே அவரை சீண்டிக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கே. அவரது படத்தை வாங்கி ரிலீஸ் செய்யாமலேயே முடக்கி வைத்திருந்தது ஒரு டி.வி சேனல். அப்போது பிடித்த பிரச்சனை, அவரது ஒவ்வொரு படத்தின் போதும் வெவ்வேறு ரூபங்களில் இம்சை பண்ணிக் கொண்டேயிருக்கிறது, அண்மையில் வெளிவந்த ஜில்லா வரைக்கும்.

இந்த தொல்லையெல்லாம் ஜில்லாவோடு போச்சு என்று அவரால் நினைக்கவே முடியாதபடி ஒரு சூனியம் சூழ்ந்து வருகிறதாம் அவரை. இது குறித்து லேசான கவலையை வெளிக்காட்டுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘கத்தி’ படம் பற்றிய காச் மூச் தகவலொன்றை இப்போதே பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அது என்னவாம்?

வேறொன்றுமில்லை… இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம், இலங்கையில் அதிபர் ராஜபக்சேவின் நிறுவனத்துடன் கூட்டாக தொழில் செய்து வருகிற நிறுவனமாம். இந்த படத்தில் இலங்கை அதிபரின் பணம்தான் இறக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

சும்மாவே சுறா புட்டு கிண்டுற ஃபீல்டு இது… இந்த லட்சணத்துல இது வேறயா?

Vijay’s Kathi faces hurdle even before it is completed!

Ilayathalapathi Vijay is facing hurdle after hurdle for some time, and seems it is not over yet. The hurdle seems to be more of late, as there are people decide to thwart any attempt by Vijay to come good and clean without any political affiliation.

K-town circle is busy with the buzz that his latest film Kathi directed by AR Murugadoss is facing a difficult situation now. It is said that the producer of the film is having business association with Sri Lankan President Raja Pakshe and the money invested in the film belongs to the Sri Lankan President.

The actors and the technical crew are associated with producer purely on professional front and it has nothing to do with which party does he belong to, or from where the money comes. Targeting through unscrupulous methods do not bode well for the film industry!

Read previous post:
VISHAL FILM FACTORY ”POOJAI” FILM POOJA STILLS

[nggallery id = 412]

Close