இனி இவர்கள் ‘தெரு’நங்கைகள் அல்ல!

திரு நங்கைகளை ‘தெரு’ நங்கைகளாக்கி வேடிக்கை பார்க்கிற ஆபத்தான சமூகம்தான் இருக்கிறது இங்கே. வெந்த புண்ணில் வெந்நீரை வீசியது போல, சினிமாவும் தன் பங்குக்கு அவர்களை காயப்படுத்தி வேடிக்கை பார்த்து வருகிறது. கூவாத கோழி கூவுற வேளை… என்று பாட ஆரம்பித்தவர்கள், இன்னமும் திருநங்கைகளை சினிமாவில் காட்டுகிற விதம் இருக்கிறதே… அது மனித உரிமைகளின் மீது நடத்தப்படுகிற வன்முறை வெறியாட்டம். அவங்களும் மனுஷங்கதான். அவங்களுக்கும் உணர்விருக்கு. மனசிருக்கு என்று சொல்ல வந்த ‘நர்த்தகி’ போன்ற ஒரு சில படங்களின் கதி என்ன என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்து வந்திருக்கிறோம்.

மிஷ்கின், மீரா கதிரவன் போன்ற ஒரு சில இயக்குனர்கள்தான் அவர்களுக்கும் சம உரிமை கொடுத்து கவுரவித்தார்கள். அந்த வரிசையில் கவிஞரும் இயக்குனருமான ஏகாதேசி ஒரு திருநங்கைக்கு உரிய அந்தஸ்து கொடுத்து அவரது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் ஆயிரம் பொய், ஒரு கல்யாணம் படத்தில் சேலம் ஸ்ரீதேவி ஒரு பாடலை பாடுகிறார். இவர் ஒரு திருநங்கை.

திருமண கூட்டந்தான் திருவிழா போல… என்று துவங்கும் அந்த பாடலை மிக அருமையாக பாடிக் கொடுத்திருக்கிறாராம் சேலம் ஸ்ரீதேவி. சமூகத்தில் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகி ஒவ்வோர் நாளும் சிக்கல்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் திருநங்கைகள் தங்களது சுய போராட்டத்தினாலும் ,சில முற்போக்கு இயக்க வழிகாட்டுதலாலும் பல்துறைகளில் வேலைவாய்ப்பையும் ,பதவிகளையும் பெற்றுவருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாகவே திருநங்கை சேலம் ஸ்ரீதேவி பிண்னணி பாடகி அறிமுகம். “திருநங்கை சேலம் ஸ்ரீதேவியின் குரலை பதிவு செய்த தருணம் தான் என் வாழ்வில் முக்கியமானது” என்கிறார் இயக்குனர் ஏகாதேசி.

இவரை பார்த்தாவது திருநங்கைகளை கேவலப்படுத்தாத இயக்குனர்கள் வருவார்களா பார்ப்போம்….

Salem Sridevi showed her prowess in singing

Salem Sridevi is a transgender who has a good voice. However she was deprived of her eligibility to showcase her talents. She, being a transgender not many like to give her opportunities. However lady luck smiled on her. She got the opportunity to croon a song in director Ekodasi’s film Aayiram Poi, Oru Kalyanam. Said, an elated Ekodasi, “Recording Sridevi’s song in his film is one of the important moments of his life”. Earlier too directors Mysskin and Meera Kathiravan have provided equal status to transgenders in their films.

It will be a welcome step if people acknowledge the talents and skills of these and provide opportunities, instead of looking them down.

Read previous post:
Jigarthanda Movie Working Stills

[nggallery id=236]

Close