இன்னும் கட்சியே ஆரம்பிக்கல… ஆனால் கட்சியில் பிளவாம்? விக்கித்துபோகும் விஜய் மக்கள் இயக்கம்!

இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதற்குள் கடமுடா…?

கொஞ்ச நாளைக்கு எல்லாரும் வாயை மூடிக் கொண்டிருந்தாலே நான் ஆரோக்கியமா சந்தோஷமா இருப்பேன். ஆனால் இருக்க விட்டால்தானே என்று விஜய் தனக்குள் புலம்புகிற அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் அவரை கட்சி ஆரம்பிக்க சொல்லி வலியுறுத்தி வரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.

ரசிகர்கள் தொண்டர்கள் ஆக வேண்டும். தொண்டர்கள் தலைவர்கள் ஆக வேண்டும். தலைவர்கள் சி.எம் கள் ஆக வேண்டும் என்பதுதான் இப்போது நடிக்க வரும் பல ஹீரோக்களின் எண்ண ஓட்டம். ஆனால் இந்த ஆட்சியில் இப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தால், ‘ஓட்டம் பிடிக்க’ வேண்டியதுதான். அதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் விஜய், தனது நாற்காலி ஆசையையெல்லாம் சுருட்டி வைத்து விட்டு சமர்த்துப் பிள்ளையாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் அவரை நிம்மதியாக நடிக்க விட்டால்தானே?

திருப்பூர் விஜய் ரசிகர் மன்றத்தில் செம கலாட்டாவாம். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைவரான புஜ்ஜி ஆனந்துக்கும் தாராபுரம் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும் முட்டிக் கொள்ள கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டார்களாம். நாங்கள்லாம் எஸ்.ஏ.சி ஆளுங்க. எங்களையெல்லாம் ஒதுக்கிட்டு விஜய் ஆளுங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிறார்கள் இவர்கள். (அட, அதுக்குள்ளே ரெண்டு பிரிவா?) விஜய்யை பார்க்கணும்னு கேட்டா நிறைய பணம் கேட்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். கேட்டால், நானே இந்த பதவிக்கு வர ஐந்து கோடி செலவு பண்ணியிருக்கேன் என்கிறாராம் புஜ்ஜி.

இந்த பாலிடிக்ஸ் பஞ்சாயத்தினால் மனம் உடைந்த இந்த தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர், எஸ்.ஏ.சி யின் காதுக்கு விஷயத்தை கொண்டு போனார்களாம். ‘நான் தளபதிகிட்ட சொல்லி என்னன்னு கேட்க சொல்றேன்’ என்றவர் அமைதியாக இருந்துவிட, மனம் உடைந்த ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துவிட்டார்கள். ‘நாங்க மட்டுமில்ல, தமிழ்நாடு முழுவதுமிருந்து இன்னும் ஏராளமான விஜய் ரசிகர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போறாங்க, மும்பையில் இருக்கிற தலைமையும் ஆம் ஆத்மியில் சேரப்போகுது. எங்க லட்சியமே விஜய்யையும் கொண்டு வந்து ஆம் ஆத்மியில் சேர்க்கறதுதான்’ என்று கூறுகிறார்கள் தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

விஜயகாந்துக்கே விக்கலெடுக்க வைக்குது நிலைமை. இதுல விஜய் என்ன செய்யப் போகிறாரோ?

Skirmishes in Vijay Makkal Iyakkam

Vijay Makkal Iyakkam formed by Ilayathalapathi Vijay is facing a crisis of sort as there exists already two groups in the formation – one owing allegiance to SAC and the other to Vijay. Recently there were skirmishes between the Tharapuram branch of Iyakkam and the Head Office administered by Bujji. While the Tharapuram council members say the were sidelines by the HO and demand money even to meet Vijay, Bujji says that he himself spent to Rs.5 crores to become the ‘head’ of the iyakkam.  Having failed to get justice the Tharapuram members joined the Aam Admi party recently and declare that they will not lie low till they get Vijay too to join the party.

Anna, Kalaignar, MGR, NTR, and current CM Jayalalitha were able to gain the foothold in politics and government formation due to the situations prevailed then. Now the trend is entirely different and it will be very difficult to run a party, leave alone to win the elections. Vijaykanth is the best example for those who are desirous to have such ambitions.  

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thegidi Movie Song “Vinmeen” Official Video Link

http://m.youtube.com/watch?v=Ro59iCBNBdI

Close