இன்னும் ட்ரெய்லரே வரலயே… ஜில்லா வந்துருமா?

‘ஜில்லாவுக்கு குல்லா போட்ருவாங்க போலிருக்கே…. ’ விஜய் ரசிகர்களை இப்படி பேசி பேசியே கோபமாக்கிவிடும் போலிருக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, ‘ஜில்லா பொங்கலுக்கு வந்துவிடுமா?’ என்கிற புது டவுட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. அதற்கு தோதாக வேறொரு படத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒப்பிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நிலைமை. வீரம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்டே வாங்கிட்டாங்க… இன்னும் ஜில்லாவுக்கு ட்ரெய்லர் கூட வரல… என்று அடுக்கடுக்காக அருவா தீட்டிக் கொண்டிருக்க, பதற்றத்திலிருக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

மற்ற படங்களை விட விஜய் படத்தை முதலில் ரெடி செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது படக்குழு. ஏன்? விஜய்யின் முந்தைய படத்திற்கு வரிவிலக்கு ஷோ என்ற சம்பிரதாயத்தை தாண்டுவதற்கே குடுமிப்பிடி கோதாவாகிவிட்டது. இன்னைக்கு நாளைக்கு என்று நாட்களை கடத்தி ஒருவழியாக வந்து சேர்ந்தது வரிவிலக்கு டீம். வந்தவர்களும் ஆளுக்கொரு அனல் உருண்டையை வீசிவிட்டு போக, தயாரிப்பாளருக்கு பத்து கோடிக்கும் மேல் நஷ்டம். வரிவிலக்கு இல்லையென்றால் அந்த படத்திற்கு முப்பது சதவீத டாக்ஸ் மண்டைக்குள் ஏறிவிடுமல்லவா?

இந்த முறை படத்தை அட்லீஸ்ட் பத்து நாட்களுக்கு முன்பாக முடித்தால்தான், ‘ஐயா… வரிவிலக்கு ஷோவுக்கு வாங்க’ என்றே அழைக்க முடியும். அவர்களும் இதோ அதோ என்று நாட்களை கடத்தி ரிலீசுக்கு முதல் நாளன்றாவது பார்ப்பார்கள். வரிவிலக்கு குழு என்ன பதில் சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் விஜய் போன்ற கலெக்ஷன் ஹீரோக்களின் படத்திற்கு விலையே வைக்க முடியாது. அப்படி வாங்கினாலும் டாக்ஸ் பிடிப்பார்கள் என்று தெரிந்தால், கதி கலங்கிப் போவார்கள் விநியோகஸ்தர்கள். இவ்வளவு பிரிச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறதாம்.

நாளாக நாளாக நம்பிக்கையின் உச்சந்தலையில் நண்டுப்பிடி. பிடியை தளர்த்த புறப்பட்டு வா ஜில்லா….

Vijay’s Jilla’s delay puts fans and distributors in tense

It was announced earlier and insisted again and again at all events that Vijay’s Jilla will be released for Pongal. However there seems to be some delay in the post production stages which is causing concern for Vijay’s fans and distributors alike. Since it is absolutely necessary for the distributors to know the tax waiver approval from the officials, under normal circumstances the team should have been invited officially at least ten days in advance, to watch the film for granting the waiver. If they are going to watch the film a day or two before the release of the film and if the approval is not given, it has to go to Revising Committee which will again take some time before the final verdict is out. To meet all these statutory formalities there is very little time for Jilla, as neither the trailer of the film is ready, nor is the first copy ready to go to Censors. Vijay’s fans are very tense with the rumours doing rounds that Jilla is getting delayed.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விவேக் முட்டாள் இல்ல… குருநாதரின் பேச்சால் குஷியான விவேக்!

ஆசிர்வாதங்கள் நிரம்பிய மேடை அது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புடைசூழ வந்திருந்து புது விவேக்கை வாழ்த்தினார்கள். அதென்ன புது விவேக்? ‘நான்தான் பாலா’ படத்தில்...

Close