இன்னொரு நடிகையும் பஞ்சாயத்துல சிக்கிட்டாரே….

எதற்குமே கவலைப்படாத சாமியார்களை கூட காவியை கிழிச்சுகிட்டு கமண்டலத்தை உடைக்க வைக்கிற வித்தை நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த கலை. சாமியார்களுக்கே அந்த கதி என்றால், சாதாரண தயாரிப்பாளர் என்னாவார்? ‘உயிர்மொழி’ படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த அத்தனை நிருபர்களுக்கும் ‘லைவ்’ ரிப்போர்ட் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் சண்முகப்ரியா.

ஒரு மைனஸ் பற்றி சொல்வதற்கு முன்பாக இன்னொரு ப்ளஸ் பற்றி சொல்வதுதான் நடுநிலையாளர்களுக்கு அழகு என்பதால் முதலில் ப்ளஸ். முன்னதாக திரையிடப்பட்டது ஒரு காட்சி. தன் காதலனுடன் கண் பார்வையில்லாத காதலி பேசிக் கொண்டே வருவது போன்ற காட்சி. படத்தின் நாயகி கீர்த்தி சுமார் ஐந்து நிமிடங்கள் எவ்வித கட்டும் இல்லாமல் டயலாக்கையும் நடிப்பையும் ஒரு சேர குழைத்து கொடுத்த விதம் அசரடித்திருந்தது. ‘நாங்கள்ளாம் பிரஸ்சுங்கப்பா’ என்கிற திமிரையும் தாண்டி அரங்கத்தில் கைதட்டல் ஒலிக்க, அதை காணும் கீர்த்திதான் அப்படத்தின் ஹீரோயினான கீர்த்திக்கு இல்லை.

இந்த ஷாட்டை சிங்கிள் ஷாட்டாக எடுத்து பிரமிப்பூட்டியிருந்தார் டைரக்டர். செம்மொழி பூங்காவில் வளைந்து நடந்து செல்லும் அந்த நீண்ட ஷாட்டில் ஒரு ஜர்க் கூட இல்லாமல் எடுத்திருந்தார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். இந்த ஒரு காட்சியை மட்டும் பத்து நாட்கள் எடுத்தோம் என்றார் டைரக்டர்.

இனி மைனஸ்சுக்கு வருவோம். படத்தின் நாயகி ஏன் வரவில்லை? இந்த கேள்விக்குதான் பொங்கி வெடித்தார் தயாரிப்பாளர் சண்முகப்ரியா. இந்த படத்தின் ஹீரோயின் கீர்த்தியால்தான் எங்களுக்கு பிரச்சனையே. ஷுட்டிங் ஸ்பாட்ல கூட அவங்க கொடூத்த டார்ச்சர் சொல்லி மாளாது. இப்ப கூட பிரஸ்மீட் இருக்கு. வாங்கன்னு கூப்பிட்டோம். எனக்கு, அம்மாவுக்கு, மேனேஜருக்கு பிளைட்ல டிக்கெட் போடுங்க. ஸ்டார் ஓட்டல்ல ரூம் போடுங்க. அப்பதான் வருவோம்னு சொல்லிட்டாங்க. பிளைட்ல வந்து நிகழ்ச்சியில் கலந்துகிட்டு மறுபடியும் வேறொரு ஷுட்டிங்குக்கு போயாகணும் என்கிற அளவுக்கு அவங்க அவ்வளவு பிசியான நடிகையில்ல. அப்படியிருந்தும் ஏன் இந்த டார்ச்சர்னு தெரியல. இந்த விஷயத்தை நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எடுத்துட்டு போகப் போறேன் என்றார் சண்முகப்பிரியா.

ஒருவேளை சங்கம் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டா அதுக்கும் பிளைட் டிக்கெட் போட்டு கேட்பாங்களோ என்னவோ?

Actress Keerthi should learn to grow with cinema

Though there are actresses who are still humble and polite, majority of them, especially the imports, do not seem to understand the nurturing value in Cinema. Perhaps, they think, it will be one time attempt in Cinema, thus giving multifarious problems to the unit, especially to the producer. One such incident has been brought to the notice by the producer Shanmugapriya, of Uyir Mozhi.

In the promotion press meet of the film, a scene from the film, was shown, and irrespective of the fact, it was a press meet, the audience gave a thumbs up for the scene, in which the heroine Keerthi, who is blind, has given a soft as well as distinct portrayal of her character. The director was full of praise for the scene, which was taken in one shot. Amazed with the performance the press asked why Keerthi did not attend the meet.

The producer on hearing it, burst out his emotions. He said he and the crew were given all sorts of problems and torture by Keerthi and went on to say that even for this press meet when she was invited, the actress demanded flight tickets for her, mother and her manager. Keerthi is not a popular artiste and an upcoming artiste at that. If she is going to behave in such a manner, the film industry would soon show her the exit. To shine in one’s career, talent alone does not stand good, it is the caring and courtesy, would give much more even if talent is scarce in a person.

Finally Shanmugapriya informed the press, he is planning to take up the issue with the Producers’ Council.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராமராஜன் என்ற டவர் கோபுரம்… – வாழ்த்தி கவுரவித்த அமைப்பு

தமிழ்சினிமா என்ற கம்பீரமான குதிரையில் அமர்ந்து சில வருடங்கள் ராஜா மாதிரி சவாரி செய்தவர் ராமராஜன். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் சவால் விட்டு...

Close