இப்படியா ஏமாத்துவீங்க…? வெங்கட்பிரபுவை காய்ச்சிய ஹன்சிகாவின் அம்மா!

பிரியாணி திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. அப்படத்தின் ரிசல்ட் பற்றியெல்லாம் நாம் சொல்லப் போவதில்லை. ஆனால் அதில் நடித்த ஹன்சிகா மோத்வானியே கவலைப்படுகிற அளவுக்கு பொளந்து கட்டி விட்டாராம் அவரது அம்மா.

வெங்கட்பிரபுவின் ட்விட்டரை தினமும் வாசிக்கிற வழக்கம் உள்ளவர் அவர். சமீபத்தில் ஏதோவொரு கருத்தை வழக்கம் போல ஜாலியாக கொட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு. அதை படித்த ஹன்சின் அம்மா, மிக சாதாரணமாகதான் போன் போட்டாராம் வெங்கட்டுக்கு. ஆனால் திடீரென எமோஷன் ஆகிவிட்டாராம். காரணம்…?

படத்தில் ஹன்சிகாவை வைத்து எடுக்கப்பட்ட பல காட்சிகள் நறுக்கப்பட்டதுதான். அதுமட்டுமல்ல, முழுசாக ஒரு பாடலையே நீக்கிவிட்டாராம் வெங்கட். இதெல்லாம் கூட படத்தின் நீள அகலம் கருதி சில நேரங்களில் நடந்துவிடும். ஆனால் பிரேம்ஜி, ஹன்சிகாவிடம் காதலை சொல்கிற காட்சியை தங்களிடம் சொல்லாமலே வெங்கட் எடுத்துவிட்டதாக கருதினாராம் அவர். அதெப்படி முடியும்?

பிரேம்ஜியும் ஹன்சிகாவும் சேர்ந்து நிற்பது போல காட்சியை எடுத்துவிட்டு, அதற்கப்புறம் பிரேம்ஜி கையில் ரோஜாவுடன் ஹன்சிகாவை பார்த்து காதலை சொல்வதாக எடுத்திருக்கிறாராம் வெங்கட். பிரேம்ஜிக்கு தனி ஷாட் எடுத்து அதை பின்பு படத்தில் சேர்த்திருப்பதை இப்போதுதான் கவனித்தாராம் இந்த அப்பாவி அம்மா. விட்டுட்டு போறதுக்கு நான் ஒண்ணும் பிகர் இல்ல. பிரண்டு என்று கார்த்தி ஒரு காட்சியில் சொல்வாரில்லையா? அதே காட்சியை தொடர்ந்து ஹன்சிகாவுக்கும் அப்படியொரு டயலாக் இருந்ததாம். அதையும் நறுக்கிவிட்டாராம் வெங்கட்.

இதையெல்லாம் விலாவாரியாக விவாதித்த ஹன்சிகாவின் அம்மா, ‘இப்படியா ஏமாத்துவீங்க எங்களை?’ என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Hansika’s mother calls director Venkat Prabhu cheat

Hansika’s latest film Biriyani with Karthi is having a mixed welcome from the audience and critics alike. However Hansika’s mother was not happy as she felt that her daughter’s portions have been indiscriminately deleted including a song sequence. There was also a shot in which Premji would be murmuring his love for Hansika and this was taken without informing Hansika. These indiscriminate acts of the director has caused heart burns to Hansika’s mother, who called up Venkat Prabhu and bashed him, it is learnt. She even said to have called him a cheat. The tone and tenor of her talks has put Hansika in worry about the incident.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எமி பேசும் சென்னை தமிழ்! இது ஐ பட அட்ராசிட்டி

ஐ என்று அழகு காட்டிக் கொண்டிருந்த எமிக்கு விடுதலை விடுதலை விடுதலை... தண்ணியடிக்கக் கூடாது. பார்ட்டிக்கு போக கூடாது. முன்நேரத்தில் உறங்கணும். அதிகாலையில் விழிக்கணும். யோகா கட்டாயம்....

Close