இப்படியெல்லாம் எழுதுனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்… -த்ரிஷா எச்சரிக்கை!

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சாட்டையை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா. அண்மையில் இவர் சரக்கடித்துவிட்டு சண்டி ராணியாக மாறியதாகவும், இதனால் ஆந்திராவே அல்லோலகல்லோல பட்டதாகவும் நியூஸ் ஏரியாவில் ஒரே நியூசென்ஸ்! இதற்கல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், கேள்விக்கு விளக்கம், விளக்கத்திற்கு கேள்வி என்று மாறி மாறி மனப்பாடம் செய்ய வேண்டி வரும் என்று நினைத்திருக்கலாம். சாஃப்ட்டாகவும் சைலன்ட்டாகவும் இருந்துவிட்டார் த்ரிஷா.

இருந்தாலும் ஒரு முறை சீறிவிட்டு ஓய்ந்துவிடுவதே சிறந்தது என்று அட்வைஸ் செய்திருக்கிறது அவரது மனசு. முன்னணி நாளிதழ் ஒன்றில் இது சம்பந்தமாக பேட்டியளித்த த்ரிஷா, ஒரு விஷயத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறார். சந்துக்குள்ளிருந்து சந்தேக பந்துகளை வீசும் அன்பர்கள் இதற்கப்புறமாவது த்ரிஷா விஷயத்தில் கவனமாகி அவரது லெஃப்ட் ரைட் தோள்களுக்கு இரண்டடி தள்ளி நடக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அந்த பேட்டியில்? என்னை மாதிரி நட்சத்திரங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். இதை சாதகமாக வைத்துக் கொண்டு புரளியை கிளப்பிவிடுகிறார்கள் சிலர். நினைத்தால் வழக்கு போடவும் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்கவும் எவ்வளவு நேரமாகும் என்று கேட்டிருக்கிறார்.

கம்பி எண்ண பிராப்தமிருக்கும் வதந்தி குல திலகங்கள் தங்கச்சியை பற்றி எழுதுவதற்கு முன்னால நல்லா யோசிச்சிட்டு எழுதுங்க…

Trisha warns of stern action against those journos who exploit situation

Recently Andhra media created a buzz in the film circle alleging that Trisha has created a scene after she was drunk in a Star hotel. She did not respond to the allegations, perhaps thinking it might be meaningless. Nevertheless she was asked about the allegations in an interview to a weekly. She thrashed those who created and warned of diree consequences. She said due to hectic schedules for the actors like her, did not permit them to take up the issues that are thrown by unscrupulous journos. If she had decided to take up them head-on and file a complaint with Police or file a case in the court, how long would it take for her to do it? she questioned. Unlike other actresses, Trisha is a typical Chennai girl and she can dare if she thinks she is on the right path.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கிரிக்கெட் வீரர் Bravo வும் கெட்டார்… – தமிழ்சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ்!

ஒரு பாடலுக்கு ஆடுகிற வித்தையை இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒதுக்கிவிட்டது தமிழ்சினிமா. ‘சித்திரம் பேசுதடி’ படத்திற்கு பிறகு, படம் எடுப்பதையே தள்ளி வைத்திருந்த தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், நீண்ண்ண்ண்ட...

Close