இப்போதைக்கு அமைதிதான் என்னோட பதில்! – கவுதம்மேனன்

அனில் அம்பானியாகவே இருந்தாலும், அமிஞ்சிக்கரை சேட்டிடம் டூவீலர் லோனுக்கு நிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால் மாற்ற இயலும்? அப்படிதான் ஆகிவிட்டது கவுதம் மேனனின் நிலைமை. இவரது அடுத்த படம் பற்றி ஆளாளுக்கு ஒரு செய்தியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அஜீத் இவரை அழைத்துக் கொண்டு ஏ.எம்.ரத்னத்தின் அலுவலகத்திற்கே சென்றிருந்தார். அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு துடியாய் துடித்தது மீடியா.

பூனை நுழையுற இடுக்குல யானை நுழைஞ்ச மாதிரி, இந்த செய்திக்கே இன்னும் விளக்கம் வரல. இதுக்குள்ளே இது வேறயா என்பது மாதிரி இன்னொரு நியூசும் பரவிவிட்டது. இடைக்கால நிவாரணமாக சிம்புவுடன் டிராவல் பண்ணலாமே என்று முடிவு செய்திருக்கிறாராம் கவுதம். ‘விண்ணை தாண்டி வருவாயா’ ஹிட்டானதிலிருந்தே கவுதமை விரட்டிக் கொண்டிருக்கிறார் சிம்பு.

இதுபற்றியெல்லாம் விரிவாக பேசுவதற்காக கவுதம் செல்போனுக்கு போன் அடிக்கும் நிருபர்களுக்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.“——–
————————————————————————————————-
————————————————————————————————
—————————————–” வேறொன்றுமில்லை. அமைதி. அமைதி. அமைதி மட்டும்தான் அந்த பதில். ‘இப்போதைக்கு சைலன்ட்டா இருக்காருன்னு வேணும்னா நியூஸ் போட்டுக்கங்க. ஏதாவது நடந்தா நானே சொல்றேன்’ என்கிறார்.

‘Silence’ is the better answer now – Gautham Menon

Gautham Menon has become a hot cake in media industry. Day in and day out, Gautham always part of the news in every film journal, daily, magazine, TV and everywhere, especially after the Suriya’s public letter announcing his walk-out from Dhruva Natchathiram. While there was a news that Ajith walked into producer AM Rathnam’s office, with Gautham Menon, to discuss his next film, there were reports in the media that Gautham Menon is doing a stop-gap film, to retrieve himself from the financial mess. Gautham would do a movie with Simbu as both are in dire need of a hit….. so on and so forth. When Gautham was contacted to find out the facts, Gautham answer is same to every media personnel – Silence. He said his ‘silence’ is the answer for all the questions of the media, as of now and would share the information as and when something concrete happens.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆம்புலன்சுக்கு 108… அவசரத்திற்கு விவேக்! – தேனி கண்ணன்

சினிமாவில் என் நெருங்கிய நண்பர்களில் விவேக் சார் முக்கியமானவர். எனக்கும் விவேக் சாருக்குமான நட்பு பற்றி சொல்லி விடுகிறேன். நான் நடுச்சாமத்தில் போன் பண்ணினால் கூட எதையாவது...

Close