இயக்குனரை அல்லாட விட்ட இரண்டு நடிகைகள்…

அண்மையில் வெளிவந்திருக்கும் ‘மெய்யழகி’ படம் வசூல் ரீதியாக ‘மொய்’யழுகினாலும், விமர்சகர்களால் ‘அட’ என்று பாராட்டப்படுகிற ரகம். இந்த படம் தோல்வியா அல்லது படுதோல்வியா என்று கூட கணிக்க முடியாமல் தவிக்கிறார் அப்படத்தின் டைரக்டர். அதே நேரத்தில் ‘எல்லாரும் பாராட்டுறாங்களே… இதில் கொஞ்சம் கமர்ஷியல் வேல்யூ உள்ள ஹீரோயின்கள் நடித்திருந்தால் ஒரு வாரமாவது தியேட்டரில் தாக்கு பிடித்திருக்குமே’ என்கிற வருத்தமும் மேலிட அப்படத்தின் இயக்குனர் ஜெயவேல் புலம்பி வருவதும் ஐயோ பாவமாக இருக்கிறது. இருந்தாலும் உலக பட விழாக்களில் இப்படம் வசூலை குவிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் இவரும் தயாரிப்பாளரும். அவ்வாறே நடக்க ஆசிர்வதிப்போமாக.

ஏன், கமர்ஷியல் ஹீரோயின்களின் கால்ஷீட்டுக்காக முயலவே இல்லையா அவர்? அதை அவர் வாயாலேயே கேளுங்க… ‘நான் முதலில் சினேகாவிடம்தான் கதை சொல்ல ட்ரை பண்ணினேன். கதையை போன்லேயே சொல்லுங்க’ என்றார். கதையை போன்ல சொல்ல சொல்றாரே என்று வருத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தேன். பத்து நிமிடம் போவதற்குள் ‘நானே உங்களை கூப்பிடுறேன்’ என்று கூறிவிட்டு போனை வச்சுட்டார். அதற்கப்புறம் போனை எடுக்கவும் இல்லை. கூப்பிடவும் இல்லை.

இவர்தான் இப்படி என்றால், நடிகை பூர்ணா இன்னும் மோசம். கதையை கேட்கும்போதே கண்ணீர் விட்டு அழுதார். ஆஹா வொர்க்கவுட் ஆகிருச்சுன்னு நினைச்சேன். படத்தில் நடிக்க அட்வான்சும் வாங்கினார். அதற்கப்புறம் ஆறு மாசம் நான் அலையா அலைஞ்சதுதான் மிச்சம். கால்ஷீட்டே கொடுக்கல. வேற வழியில்லாம அறிமுகமில்லாத நடிகையை நடிக்க வைக்க வேண்டியதாப் போச்சு என்றார்.

Sneha and Poorna ditched director Jayavel

Jayavel whose film Meyyazhagi was not commercially successful one, it has received critical acclaims. When asked the director why he has not cast a popular heroine in the film so as to get some recognition, he pointed out that he did approach Sneha and Poorna, but both of them disappointed him. When he got in touch with Sneha she asked him to narrate the story over phone, and after listening for about 10 minutes, interrupted the director to tell him she would call him later. But she never contacted him. On the other hand Poorna’s case is much worst. Having listened the story and taken the advance, she made the director running from pillair to post but she never gave him the call sheets. Finally he roped in a new face and completed the film. Now Jayavel and his producer are waiting for the opportunity to showcase their film in Film Festivals. We hope they are bestowed with such opportunities.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவர்தான் கவுதம்மேனனின் ஹீரோயின்!

எல்லாமே தங்கம்தான். ஆனால் ஒவ்வொரு ஜூவல்லரிக்கும் ஒவ்வொரு குவாலிடி இருக்குமல்லவா? கவுதம் மேனன் ஜுவல்லரி தங்கங்களுக்கு மட்டும் தரத்திலும் சரி, நிறத்திலும் சரி, டாப்போ டாப் என்பார்கள்...

Close