இரண்டாம் முறையாக தேசிய விருது பெறும் JSK ஃபிலிம் கார்பரேஷன்

JSK Satish Kumar awarded National award for ‘Kuttram Kadithal’

JSK film Corporation, known for its prominence in the Tamil Industry has been producing good cinema with artistic skills and human emotions. JSK Satish Kumar ,  an exemplary lover and passion holder towards cinema has staged films from Tamil in many International forums. The determinant producer can be named for many appreciation and accolades.

‘Kuttram Kadithal’ film have become another feather in the cap for JSK Film Corporation. The Social –Thriller film has been awarded the Best Regional Film in the 62nd National Awards. JSK Satish Kumar is a proud man to receive this honor for ‘Kuttram Kadithal’ at National Award Ceremony at Rashtrapathi Bhavan, Delhi. JSK Film corporation is winning this laurel for the second consecutive time following by ‘Thanga Meengal’ Last year .

“ We are proud  to win the National award for the second time.  JSK Film Corporation has much more Unique conceptual films  lined up for release like ‘Naalu Polisum Nalla Iruntha Oorum’, ‘Andava Kaanom’, ‘Taramani’,and ‘Sivappu Enaku Pidikum’. We have also branched out in the Audio Industry with our own audio label JSK  Audios to support the film music to reach audience through all feasible platforms.

JSK film  corporation is also looking after overseas releases and is all planning to step into the Bollywood arena with  the remake of ‘ Kuttram Kadithal’ in Hindi. With some good offers pouring in, we are about to announce good news soon. I thank all the audience who supported and will be supporting  JSK Film Corporation in all our endeavours. I extend my thanks to all actors, technicians,  producers, distributors and exhibitors for their support in making JSK film corporation to achieve this feat.  ” says the producer JSK Satish Kumar , Founder & Managing Director of JSK Film Corporation.

இரண்டாம் முறையாக தேசிய விருது பெறும் JSK ஃபிலிம் கார்பரேஷன்

தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை  மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். சினிமாவின் மீது அதித பற்றுடைய   JSK சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சென்று பற்பல விருதுகளையும் , பெருமைகளையும் தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளார்.

JSK ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் பெருமிதத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறந்த பிராந்திய  திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்  62 ஆம் தேசிய விருது வழங்கும் விழாவில் JSK சதீஷ் குமார் இவ்விருதினை பெறுகிறார். கடந்த வருடம் ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கு இவ்விருதினை வென்ற JSK சதீஷ் குமார் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இரண்டாவது முறை தேசிய விருது வாங்குவது மிகவும் பெருமிதமான தருணம். ரசிகர்களுக்கு தரமான படங்களை கொடுப்பதே  எங்கள் முழுமுதற் நோக்கம். JSK ஃபிலிம் கார்பரேஷன் மேலும் ‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’, ‘அண்டாவ காணோம்’, ‘தரமணி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. எங்கள் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள JSK ஆடியோ நிறுவனம் திரை இசையை அனைத்து தொழில்நுட்ப வாயில்கள் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறது.

JSK ஃபிலிம் கார்பரேஷன் ஒவர்சீஸ் வெளியீடுகளையும் கவினிக்க தயாராகி வருகிறது. ‘குற்றம் கடிதல்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். இன்னும் சில பட வாய்ப்புகளும் பாலிவுட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது விரைவில் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்\பட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தின் பெரும் தூணாய்  விளங்கும் அனைத்து ரசிகர்களுக்கும், எங்களது வெற்றிக்கு துணையாய் நிற்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனப் பெருமிதத்துடன் கூறினார் JSK சதீஷ் குமார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காக்கா முட்டை- குழந்தைகளுக்கு விருது

62 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புதுடில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படமான காக்கா முட்டை  படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட விருதும், இப்படத்தில்...

Close