இரவிலே படம் பிடிக்கப்பட்ட “ பழைய வண்ணாரப்பேட்டை “

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் “ பழைய வண்ணாரப்பேட்டை “ இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோசங்கர், சேசு, மணிமாறன், தீனா, பரணி, ஜெயராஜ், கூல் சுரேஷ், தேனி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மோகன்.ஜி

படம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டோம்..

அரசியல் மற்றும் திரில்லர் கலந்த படம் வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. படத்தின் பாதி இரவிலேயே படமாக்கப் பட்டுள்ளது. படு விறுவிறுப்பான திரைக்கதை இதில் இருக்கும். இந்த படத்தில் கானாபாலா மற்றும் வேல்முருகன் இருவரும் பாடிய பாடலில் அவர்களே நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடலான “ உன்னத்தான் நினைக்கையிலே “ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“ ரன் ரன் உன்னை ஜெயித்திட ரன் ரன் “ உன் தோல்வி விலகிட ரன் ரன் “

அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன் “ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ புருஸ்லீ – 2 தி பைட்டர் “...

Close