இராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் கிரிஷ் –  சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் “

பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”

இந்த படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருட்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –    செந்தில்மாறன்.ஆர் ( இவர் பி.ஜி.முத்தையா, வெற்றி ஆகியோரது உதவியாளர்.

இசை    –  ரைஹானா சேகர் (ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி)

பாடல்கள்   –  கவிஞர் வாலி, கங்கை அமரன்

எடிட்டிங்    –  ராஜாமுகமது

நடனம்     – தினேஷ்

கலை      –  எஸ்.எஸ்.மூர்த்தி

தயாரிப்பு மேற்பார்வை –  ஆர்.ஈ.ராஜேந்திரன்

தயாரிப்பு   –  இராவுத்தர் பிலிம்ஸ் A.S. இப்ராகீம் ராவுத்தர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  தம்பி செய்யது இப்ராஹிம். ( இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹீம் கூறியாதவது…

இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களை சொல்ல தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.

இந்த படத்திற்காக காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டது.

கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட  பாடல்தான்.

படப்பிடிப்பு  தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹீம்.

Read previous post:
Shruthi Haasan launches ‘Gabbar is Back’ game amidst grander fanfare

  Shruthi Haasan launches ‘Gabbar is Back’ game amidst grander fanfare  The hot and happening actress Shruthi Haasan launched the...

Close