இருக்கறது போதாதுன்னு இது வேறயா?

தமிழ்சினிமாவில் பெரிய தயாரிப்பாளர்கள் ஒரு சிலரை பார்த்து, ‘அவரு செலவு பண்ற பணம் எங்கிருந்து வருது தெரியுமா?’ என்று சென்னைக்கு அருகிலிருக்கும் ஒரு மடத்தை நோக்கி கையை காட்டுவார்கள் பத்திரிகையாளர்கள். இப்படி விபூதிய வித்து சேர்த்த பணத்தை வெள்ளை திரைக்காக செலவு பண்ணுகிறார்களே இந்த சாமியார்கள் என்கிற விமர்சனம் அவ்வப்போது எழுந்தாலும், அதை உறுதிபடுத்த முடியாமலே உள் காய்ச்சலுக்கு ஆளாகிற நிருபர்களும் இங்கே உண்டு.

இருக்கிற வயிறெரிச்சல் போதாது என்று நித்யானந்தரின் மடத்திலிருந்தும் தயாரிப்பாளர்களுக்கு பிரசாதம் வந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? ஒருவேளை அவரும் பைனான்ஸ் பண்ணுகிறாரோ என்றெல்லாம் அதிர்ச்சி கிளப்புது கோடம்பாக்கம். கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தரின் மடத்திலிருந்து அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் விபூதி குங்கும பிரசாதங்களும் சில தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கு வருகிறதாம். இப்படி கேட்காமலே வருகிற பிரசாதத்தை ஏற்றுக் கொள்கிறவர்களால் பிரச்சனையில்லை? இதையெல்லாம் ஏம்ப்பா கேட்காமலே அனுப்பி வைக்கிறாங்க? அவரோட நிஜ முகம்தான் வெளுத்துப் போச்சே, அதற்கப்புறமும் அவரை வணங்க எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? என்று புலம்புகிறவர்களால்தான் பிரச்சனை. நம்ம அட்ரசையெல்லாம் யாரு கொடுத்தா? என்று துப்பறிய ஆரம்பித்திருக்கிறார்களாம்.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் நாள்தோறும் வெட்டு குத்துன்னு வம்பு தும்பா போயிட்டு இருக்கு. இந்த லட்சணத்துல இது வேற… ஆன்மீகத்தை வளர்க்கிறேன்னு இப்படி அடையாளம் தெரியாத ஆளுங்களுக்கு பிரஷர் ஏத்தாம, இருக்கிற பக்தர்களை தக்க வைக்கிற வேலைய பாருங்க ஸ்வாமிஜி…

Swami Nithyananda rising its presence in Kollywood

While it is common in Kollywood that those who believe in religious sentiments would continue to exhibit their attachment openly, there are others who are totally against it. However both sides exist without any trouble. Of late, Nithyananada books and kumkums are being delivered to the producers’ homes without their request. While few of the producers who make no issues, others wonder why he sends these to them when they are aware of his ‘deeds’. They are further more surprised as to who has given the address to Nithyananada to send books and prasadams to them? May be Producers’ Council is readying for yet another battle of wits?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sivappu Enakku Pidikkum Movie Stills

[nggallery id=147]

Close