இலங்கையில் ஃபேஸ் புக்குக்கு தடை? – ராஜபக்சே எச்சரிக்கை

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார்.

புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே, பேஸ்புக் என்ற சமூகவலைத்தளத்தில் நச்சு போன்று என்னை பற்றி செய்திகள் பரவி வருகின்றது. அதில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நான் நினைத்தால் இலங்கையில் பேஸ்புக்கினை தடை செய்யும் வழிகள் அரசாங்கத்திடம் உண்டு. என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், “ஃபேஸ்புக்கை தடை செய்யும் எண்ணங்கள் எதுவும் தற்போது அரசுக்கு இல்லை” என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘தல’ படம் தீபாவளி கழிச்சு வந்தா நல்லாயிருக்கும்…’ -அஜீத்துக்கு நெருங்கும் ஆபத்து?

இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் வருவதாக திட்டம். ஆனால் விதி என்னவோ? அதன் வகுத்தல் பெருக்கல்கள் என்னவோ? அதையெல்லாம் அறிந்து கொள்ள தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும்...

Close