இளையராஜா உடல் நலம் பெற வேண்டும்… பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து உருக்கம்!

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமியின் புதிய அவதாரம் கங்காரு. இந்த படத்தில் நீங்கள் வேறொரு சாமியை பார்ப்பீர்கள் என்று இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் வாழ்த்தினார்கள். இத்தனை காலம் ‘கறை நல்லது’ என்ற மனநிலையில் இருந்த சாமி, இந்த படத்தில் ஒரு டிடர்ஜென்ட்டை மூட்டையையே பிரித்துக் கொட்டி அதில் தனது இமேஜை துவைத்து எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

கங்காரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ். ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முக்கிய நடுவராச்சே? பாடல் வெளியீட்டு விழாவையும் அதே ஃபுளோரில் வைத்து அதை விஜய் டி.வி யில் ஒளிபரப்பவும் செய்துவிட்டார் ஸ்ரீநிவாஸ். பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த தொகுப்பை அப்படியே வேறொரு அரங்கத்தில் ஒளிபரப்பி இன்னொரு முறையும் பாடல்களை வெளியிட்டார்கள். விஜய் தொலைக்காட்சியிலும் நேரில் வந்து வாழ்த்திய பாடலாசிரியர் கவிப்பேரரசு இங்கும் வந்திருந்தார்.

சுமார் அரைமணி நேரம் அவர் பேசிய பேச்சு, நரம்படி நாராயணன்களை மட்டுமல்ல, நரம்பே இல்லாத நாராயணன்களை கூட சிலிர்தெழ வைத்திருக்கும். விழாவில் தனக்கு முன்னதாக பேசிய சீமானின் பேச்சுக்கு நன்றி தெரிவித்தவர், எனது எல்லா பாடல் வெளியீட்டு விழாவுக்கும் சீமான் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக பேசிய சிபிராஜின் பேச்சை நினைவுபடுத்திய வைரமுத்து, ‘கங்காரு தனது குட்டியை மடியில் சுமந்து கொண்டேதான் செல்லும். அதுமட்டுமல்ல… மிக உயரத்தில் பாய்ந்து செல்லும் மிருகமும் அதுதான் என்று சிபிராஜ் சொன்னார். இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். எவ்வளவு உயரத்தில் கங்காரு பாய்ந்தாலும் தன் குட்டியை விட்டுவிடாது. அதுபோல இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும், மீண்டும் இதே கூட்டணி இணைந்து படம் எடுக்க வேண்டும். இந்த டைரக்டரையும் இசையமைப்பாளரையும் தயாரிப்பாளர் விட்டுவிடக் கூடாது என்றார்.

அவரது பேச்சில் மிக உணர்ச்சியமயமான கட்டம் ஒன்றும் வந்தது. பேசிக் கொண்டே வந்த வைரமுத்து ஓரிடத்தில் நிறுத்தி நிதானமாக பேச ஆரம்பித்தார். இன்று உலகத் தமிழர்கள் இதயங்களையெல்லாம் தன் இசையால் ஆண்ட இளையராஜா மருத்துவமனையில் இருக்கிறார். கிராமிய இசையை வெள்ளை மாளிகைக்கும் கேட்கும்படி செய்தவர் அவர். அவர் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக திரும்ப வேண்டும். இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆசைப்படுகிறேன் என்றார்.

இளையராஜாவின் ஜென்ம விரோதி என்கிற அளவுக்கு கருதப்படும் வைரமுத்து இவ்வாறு பேசியதை சற்று இன்ப அதிர்ச்சியோடும், உணர்ச்சிப் பெருக்கோடும் கவனித்த பார்வையாளர்கள் கைதட்டி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

சில காம்பினேஷன்கள் மட்டுமல்ல, சில பிரார்த்தனைகளும் கூட கைதட்டல்களுக்கு உரியவை!

Gangaru audio launched by AR Rahman and Vairamuthu

Director Samy who earlier directed, Uyir, Mirugam and Sindhu Samaveli, has come out with yet another classic Gangaru. The film’s audio was launched on 26th with AR Rahman and Lyricist Vairamuthu being the Chief Guests. Popular singer Srinivas has composed music for the film. Due to his influence through Super Singer in Vijay TV, he earlier launched the audio in Vijay TV super singer programme with AR Rahman and Vairamuth. However the makers once again had launched the audio officially in an auditorium to which too both Rahman and Vairamuthu were present as Chief Guests.

Speaking on the occasion Lyricist Vairamuthu said how Gangaru would not leave its pet under any circumstances, the producer of the film too should not leave the director and the music composer for his future ventures. His fiery speech suddenly turned emotional. Recalling the hospitalisation of Isaignani Ilayaraja, he said it was because of Ilayaraja the rustic music was echoed in palatable buildings too. He showered praise on Ilayaraja’s mastery in music and prayed that he should recover early from his indisposition soon, and continue to compose music in future too.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாரா கர்ப்பிணியா…? ம்ஹும் ஒத்துக்க முடியாது….

ஒரு கர்ப்பிணி தன் கணவரை தேடியலைகிற கதைதான் கஹானி. வித்யாபாலன் நடித்த இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் நெட்டுக்குத்தாக ஆச்சர்யப்பட...

Close