இளைய தளபதியா? அப்படி யாரையும் தெரியாது -விஜய்யின் தம்பி விக்ராந்த் கொந்தளிப்பு
பாண்டியநாடு படத்தின் சக்சஸ் மீட்! விஷால், லட்சுமிமேனன், இயக்குனர் சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்டவர்களுடன் படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்திருந்த பாரதிராஜாவும் வந்து சேர, களைகட்டியது ஏரியா. லவ், ஆக்ஷன், சமாளிப்ஸ், சைட் கிக் என்று ஒரு திரைப்படத்தில் அடங்க வேண்டிய அத்தனை காட்சிகளும் அங்கு அரங்கேறியது. எதையோ நினைத்து விஷால் பேசியதுதான் ஒரு பெரிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழியாகவும் இருந்தது.
‘விக்ராந்த் என் தம்பி மாதிரி. என்னோட பதினாலு வருஷத்து நண்பன். அவனுக்கு ஒரு நல்ல படம் அமையலையே என்று நான் நினைச்சுருக்கேன். இந்த கதையை சுசீந்திரன் எங்கிட்ட சொன்னதும், அந்த கேரக்டர்ல விக்ராந்த் நடிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன். அவரும் அதை பெரிய மனசோட ஏத்துகிட்டு விக்ராந்தை நடிக்க வைச்சார். அவருக்கு என்னோட நன்றி. வெகு சீக்கிரம் இதே சுசீந்திரன் சார் டைரக்ஷன்ல நானும் விக்ராந்தும் சேர்ந்து மறுபடியும் நடிக்கப் போறோம்’ என்று விஷால் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விழியோரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்க உணர்ச்சி குவியலாக உட்கார்ந்திருந்தார் விக்ராந்த்.
‘விக்ராந்த்… உங்களோட அண்ணன் இளைய தளபதி செய்யாத ஒரு விஷயத்தை புரட்சித் தளபதி செஞ்சுருக்கார். இது பற்றி என்ன நினைக்கிறீங்க?’ என்று மிக சரியான நேரத்தில் சிண்டு முடிந்தார் கான்ட்ரவர்சி கார்க்தி என்று செல்லமாக அழைக்கப்படும் நிருபர். ‘விஷால் என்னோட நண்பன். எனக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சுருக்கான். அவனுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியல. அவ்வளவுதான். நீங்க சொல்ற இளைய தளபதி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஒண்ணும் சொல்லவும் விரும்பல…’ என்றார் விக்ராந்த்.
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்தே கல்லெறிந்தாரா? அல்லது நிஜத்தில் அவருக்கும் விஜய்க்கும் எவ்வித நீக்குபோக்கும் இல்லையா என்பதை சுற்றமும் நட்பும்தான் விவரிக்க வேண்டும்.
Vikranth lauds Vishal but avoided Vijay
Vishal hosted a success party for Pandia Nadu on 13th Nov. at a 5 star hotel, to which all cast and crew were present. Vishal also held a separate birthday bash for Vikranth who celebrated his birthday on 13th Nov. as well. Speaking to the reporters during the success party, Vishal said he always supported Vikranth, his friend for over 14 years, and a talented artiste. He recommended him to director Suseendhiran to cast him in Pandia Nadu and he thanked the director for acceding his request. He went on to say that soon he would be producing another film under Suseendhiran’s direction, in which Vikranth would also be acting with him. Vikranth, calling Vishal as his brother, wondered how he would thank him for his help. When quizzed about Ilayathalapathy Vijay, Vikranth avoided saying that he does not know anyone, to the bewilderment of the press.