இவர்தான் கவுதம்மேனனின் ஹீரோயின்!

எல்லாமே தங்கம்தான். ஆனால் ஒவ்வொரு ஜூவல்லரிக்கும் ஒவ்வொரு குவாலிடி இருக்குமல்லவா? கவுதம் மேனன் ஜுவல்லரி தங்கங்களுக்கு மட்டும் தரத்திலும் சரி, நிறத்திலும் சரி, டாப்போ டாப் என்பார்கள் ரசிகர்கள். அவரது ‘மின்னலே’ படத்தில் அறிமுகமான ரீமாசென்னில் ஆரம்பித்து, லேட்டஸ்ட்டாக வந்த விண்ணை தாண்டி வருவாயா , நீதானே என் பொன் வசந்தம் வரைக்கும் ISI முத்திரையே கொடுக்கலாம் அவரது செலக்ஷன்களுக்கு.

கடனில் விழுந்து கட்டெறும்பாய் தேய்தாலும், அவரது ரசனை மட்டும் அப்படியே தேயாமலிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சிம்பு நடிக்க கவுதம் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு கதாநாயகி யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு யூகங்களை கிளப்பிவிட, அந்த யூகத்தில் சுகமாக வலம் வந்தார்கள் அநேக நடிகைகள். மீண்டும் ஒருமுறை த்ரிஷாவுக்கு அவர் வாய்ப்பு தரப்போவதாகவும் பேச்சிருந்தது. ஆனால் எல்லா யூகங்களையும் சைலன்ட் ஆக்கிவிட்டு, மும்பையிலிருந்து ஒரு முந்திரிப் பழத்தை கொண்டு வந்திருக்கிறார் கவுதம் மேனன். பெயர் பல்லவி ஷார். கொஞ்சம் தமிழ் பெயராக தெரியட்டுமே என்று பல்லவிக்கு பின்னால் வரும் ‘ஷார் ’ என்ற துணை பெயரை ‘டெலிட்’ பண்ணியிருக்கிறார் அண்ணாத்தே.

பாண்டிராஜ் படத்தையும் கவுதம் மேனன் படத்தையும் ஒரே நேரத்தில் ஹேண்டில் செய்யப் போகிறாராம் சிம்பு. அப்படியே பல்லவியையும் ஹேண்டில் செய்வாரா என்று கேள்வி கேட்பவர்கள், சிம்புவின் காண்டாக்ட் சர்டிபிகேட்டை காணாத அப்பாவிகளாக இருக்கக் கூடும்.

New face for Simbu and Ajith in Gautham Menon’s project

Pallavi Sharda a model turned actress who was seen in Bollywood film Besharam with Ranbir Kapoor will be debuting in Tamil film soon with none other than Ajith and Simbu. According to media reports director Gautham Menon has roped in the pretty actress to play the lead in his two films opposite to Ajith and Simbu respectively. While Simbu project is already on and the first schedule having completed, Ajith’s film will be commenced from Feb.2014 onwards. There is also buzz doing rounds that Samantha has also been considered to play the lead for Simbu in Gautham’s film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயன் ஷுட்டிங்… கிராஸ் ஆன முதல்வர்!

சென்னை போக்குவரத்து சீராகும் காலம் எப்போது என்றே தெரியவில்லை. ஆனால் அரிப்பெடுத்த முதுகுக்கு சொறியும் விரல்கள் பகையில்லை என்பது போல நெளிவு சுளிவுக்குள் வாழ பழகிவிட்டான் மிஸ்டர்...

Close