இஸ்லாமியர் ஆகிறார் யுவன்! வெளிவராத பின்னணி தகவல்கள்…

இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யுவனும் அப்படியே.

மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள். பரபரப்பான இந்த விஷயத்தை முதன்முதலில் நாட்டுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கு முன் யுவன் பற்றி….

மிக இளம் வயதிலேயே இசைஞானியின் பெயரை காப்பாற்றப்போகும் வாரிசு இவர்தான் என்று அடையாளம் காணப்பட்டவர் யுவன். வெஸ்டர்ன் இசை என்றாலும் சரி, அப்பாவை போல கிராமிய இசை என்றாலும் சரி. யுவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற அளவுக்கு மனதை மயக்கிவிடுகிற வல்லமை வந்தது. இசையில் கொடிகட்டி பறந்தார் யுவன். நிற்க நேரமில்லாமல் உறங்க நேரமில்லாமல் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருந்தது அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில். இந்த நேரத்தில்தான் எல்லா வாலிபர்களுக்கும் வருவதை போல அவருக்கும் அது வந்தது… காதல்!

மகனின் சந்தோஷமே நமது சந்தோஷம் என்று கருதிய அப்பா இசைஞானி எவ்வித முணுமுணுப்பும் காட்டாமல் சம்மதம் தெரிவிக்க, சந்தோஷமாக இல்லறத்தில் அடியெடுத்து வைத்தார் அவர். இந்த பந்தம் நெடுநாட்கள் நிலைக்காமல் போனது பூர்வ ஜென்ம பூஜ்யமா, அல்லது நிகழ்கால ஜோசியமா தெரியாது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கப்புறம் தனிமை யுவன்சங்கர்ராஜாவை கவலைப் படுகுழியில் தள்ளவில்லை. மிக மிக உற்சாகமாகதான் இருந்தார். மீண்டும் ஒரு காதல் முளைக்கக் கூடாது என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா? முளைத்தது. இந்த முறை ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யுவன்.

இந்த நேரத்தில் மிக கசப்பான அதே நேரத்தில் துடிப்பான உண்மையை சொல்ல வேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் கூட சிலரது குடும்ப வாழ்க்கையும் அவர்கள் படுகிற பாட்டையும் பார்த்தால், அட ஈஸ்வரா என்று கவலை கொள்வார்கள். யுவனுக்கும் திருமண கட்டத்தில் எந்த பூதம் வந்து அமர்ந்திருக்கிறதோ, தெரியவில்லை. இந்த திருமணத்திலும் சிக்கலாம். அவரது இரண்டாவது மனைவியையும் அவர் பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு அருகில் இல்லாவிட்டாலும் அவரை நோட்டமிடுகிற சினிமாக்காரர்கள்.

இதில்தான் அதிகம் உடைந்தாராம் யுவன். இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார். அன்பான அம்மா இருந்தார்கள் அவருக்கு. எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.

அதற்கும் கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது?

இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம். உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு.

இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Yuvan Shankar Raja turns to Islam for ‘Peace’

Success, fame, money or relationships and not even one’s profession do not give peace of mind for any person in the world. It is acquired by different persons at different places. It is not necessary that it should be same for everyone. All it wants is a place where the person is at peace and can re-live his inner thoughts.

Searching for peace of mind comes at different ages for different persons. More importantly the person would seek for it. The situation that leads to get that depends on one’s own wish or it may be depend on the circumstances that there is nothing in the world that he or she has to achieve any further.

Our own super star Rajini seeks solace and peace going to Himalayas and spends time with his Baba. And when he is at home he gets it from Guru Raghavendra. That does not mean peace and solace are available only at those places. It is available everywhere. If the person thinks it is available at home, it is available there.

Same way our own Mozart of Madras was seeking solace and peace for his own reason and purpose due to the untimely demise of his father, when AR Rahman was at a young age. He found that in Islam and Allah and now he is bestowed with everything he wanted. However high AR Rahman flies, his feet is firmly grounded, and never forgets to thank his Almighty who gave him everything he sought or not sought.

In this connotation we believe that our own music composer Yuvan Shankar Raja is seeking solace and peace in Islam religion. Kollywood insiders who do not want to be named say that of late Yuvan is more comfortable and at peace in Islam. newtamilcinema.in is glad to report the breaking story of young and happening music director Yuvan Shankar Raja.

About Yuvan

Yuvan the youngest son of Maestro Ilayaraja was found to be drawn towards music at a nascent age itself. He observed the melody, rhythm and rages his father has created very intensively. Slowly and steadily he started his own creations in music world. Surprisingly he has developed knowledge of western style music too. Whether western based or ‘gramiya’ isai or folk songs, he has produced wonderful tunes making his father very proud.

Failed Love Marriage

Like every youth in their teens, Yuvan too was drawn to ‘love’. His father was happy that his son is interested in married life, and gave his consent to marry the girl of his choice without any hesitation. Alas, the marriage did not last long, for reasons unknown. But Yuvan was not perturbed and continue to haunt the music lovers with his lilting tunes.

It is not mandatory that ‘love’ once failed should not come again for a person. Yuvan got his love for the second time and his parents were very happy. This time, they made his second marriage a family affair. Quite horribly this time too it did not go the way Yuvan expected it to be. Sources close to him say that his wife had left him making Yuvan depressed. As usual it was said that his horoscope was not conducive for marriage, and so on and so forth. Despite this, Yuvan continued his journey in music world like a conqueror with a vengeance.

Mother’s loss hit him most

Mother was his soul and comfort during his troubled days. But God has taken her too from him. Loss of mother had hit Yuvan very badly. His schedules went hay wire and topsy-turvy. He spent his time at his music studio and avoided coming to home. He did not get any solace from his relatives and friends too, it is said.

Turning Point

Dejected and depressed in life, Yuvan was seeking peace of mind and solace which he earlier received from his mother. But it is not available in retail stores to go and buy it. He suffered thinking about his life and loss of his beloved mother.

One day a friend of him handed over ‘Quran’ book and asked him to read it. His mind was not focussed and so he did not even make an attempt to rush through the book. Suddenly his inner conscience must have pushed him perhaps, he opened the book and started reading a page, by which time he was drawn into sleep. After waking up, he felt as if he was born new and felt energized.

Feeling comfortable and with determination he started reading the Quaran completely. After reading the book, he felt he has attained what he was seeking from the book. His focus was then turned towards Islam and started following the ritualistic culture of the religion, viz. praying five times a day, say the sources.

Yuvan at last found his peace of mind and solace from Islam. It is also heard that Allah has not only bestowed him, his much needed ‘peace’, but also a ‘good looking girl’ to lead his life happily.

We are happy for Yuvan that at last he has found his solace and peace in the place where he is comfortable and destined.  Place, religion or culture and anything is not important, it is the means to get the peace that is relevant and important. And Yuvan has found that now.

 

60 Comments
  1. amz harun says

    iraivan naattappadi nallathe nadakkattum….

    1. niyazhasan says

      farook

      December 31, 2013 at 7:42 pm

      அல்லாஹு தான் நாடியவருக்கு ஹிதாயத்தை கொடுக்கிறான்.. அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!
      இன்ஷா அல்லா, யுவன் அவர்களுக்கு அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..
      இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது, இன்ஷா அல்லா அவர் அதை விட்டு வெளியே வர வேண்டும்..அவர்காக நாம் அல்லாஹுவிடத்தில் துவா செய்வோம்..

      1. Afzalbava says

        Ameen

  2. Arafath says

    உறுதியான தகவல் இருந்தால் மட்டும் சொல்லுங்கள். இந்த விஷயத்தில் வதந்திகள் தேவையற்ற பில்ட் அப்.

  3. shamsudeen ibrahim says

    Unmail youwan islathirku vanthar entral mikka mahizchi.nearvazi adainthar.aanal vadanthiyai kilappi ?

  4. Ameen says

    Unmai yanral mattum share pannaum

  5. rais sabi says

    Yellapuhalum iraivanukke god Is cret

  6. Rispic says

    masha allah…

  7. ibahim says

    Ivar islam madathirku vandaal…..mudalil isai amaipathai ivar niruttha vendum…yenenraal islathil isai thadukkapattadahum

  8. கண்ணன் says

    அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு ‘அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக’ கூறுகிறார்கள். – அதைச் சொல்லுங்க!

  9. jaffar says

    Allah yarukku naadi irukaano avgalukku mattume islathai yerkkum paakiyathai tharukiran…
    Allahu aaaalam….
    Allahu akbar….
    Allahu kabir….

  10. Thariq says

    இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (Quran 2:2)

  11. mujammil says

    Masha allah ivargalai allah nervali katuvanage..

  12. shaikhfareed says

    Mashaallah

  13. Azaruddin says

    யுவன் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் யாருக்கு நன்மை ????

    அவருக்கே !!!!!!!!!!!!!!!!!!!
    கடவுள் /கர்த்தர்(அல்லாஹ்)/இறைவன் அவருக்கு நேர்வழி காட்டுவானாக

  14. rafeek says

    Masha allah….

  15. கவன பங்கர் காஜா says

    வெறும் பப்ளிக்குட்டி கூத்து இது…

  16. Fayas says

    MashaAllah…… yuwan unmaikkumma ISLAM ththai eattruk kondirundhal , awar oru periya pakkiyasalli than….. BELIEVE IN ALLAH through following the way said in quran n hadiths by messenger(saw)

    1. fowzan says

      aameen

  17. Rinas says

    யார் இஸ்லாத்திற்கு வந்தாலும் இஸ்லாத்திற்கு
    பெருமை இல்லை…
    யார் இஸ்லாத்தை விட்டுப் போனாலும் இஸ்லாத்திற்கு
    சிறுமையும் இல்லை…

    மாறாக, வந்தவருக்கே பெருமை…
    போனவருக்கே சிறுமை……

  18. ahmed says

    அல்லாஹு தான் நாடியவருக்கு ஹிதாயத்தை கொடுக்கிறான்.. அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!

    இன்ஷா அல்லா, யுவன் அவர்களுக்கு அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..

    இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது, இன்ஷா அல்லா அவர் அதை விட்டு வெளியே வர வேண்டும்..அவர்காக நாம் அல்லாஹுவிடத்தில் துவா செய்வோம்..

    1. farook says

      அல்லாஹு தான் நாடியவருக்கு ஹிதாயத்தை கொடுக்கிறான்.. அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!
      இன்ஷா அல்லா, யுவன் அவர்களுக்கு அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..
      இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது, இன்ஷா அல்லா அவர் அதை விட்டு வெளியே வர வேண்டும்..அவர்காக நாம் அல்லாஹுவிடத்தில் துவா செய்வோம்..

  19. றமீஸ் says

    பிரபஞ்சத்தைப் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதன் மூலம் மட்டுமே மன அமைதியும் ஈருலக வெற்றியும் கிடைக்கும்.

  20. asanar jazeel says

    WELCOME..

  21. Kismee says

    Unmayaha iruppin mahilchi but uruthiyana thahaval illamal thevayatra vathanthihal veandaam kealvipattathayellam parappavum,maarkathai poipikkavum veandam

  22. SANGISKHAN says

    idu unmaaiyenil nandru. aanal idai confirm pannitu seithi vandadu endral mattumey yetru kolla koodiyathu. illai endral vadanthiyai parappum anaivarukum idu oru echarikkai. allah vin koba paarvai ungalidam maarum.

  23. althaf ahamed says

    Iraivan koduka ninaipathai yaralum thaduka mudiyathu

  24. arsath says

    masah allah

  25. niyazhasan says

    may Allahu bless u frnd,wellcome to janneth

  26. Liyakath says

    Mashallah

  27. Abdurraheem says

    நல்ல வேலை ஏ.ஆர்.ஆர். இஸ்லாத்தை ஏற்றதைப் போன்று ஏற்க்கவில்லை… அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!!!

  28. Sdeen says

    சகோதரர் யுவன் பற்றிய செய்தி முற்றிலும் உண்மையானது ,அவரின் நெருங்கிய நண்பர் எனக்கும் நெருக்கமான நண்பர் .!

    அவர் இஸ்லாத்துக்கு மாறிய செய்தி திரைத்துறையில் பலருக்கும் தெரியும் …கூடிய சீக்கிரம் அதை பகிரங்கமாக அறிவிக்க இருக்கிறார் .

    கட்டுரையில் வந்த செய்தி கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கிறது ,

    இன்னொரு செய்தி …இப்போதெல்லாம் யுவன் அடிக்கடி இன்ஷா அல்லாஹ் ..மாஷா அல்லாஹ் என்கிற வார்த்தையை பிற மதத்தவரிடம் பேசும் போதும் பயன்படுத்துகிறார் .

    யா அல்லாஹ் இந்த மனிதருக்கு உன் அருள் மழையை பொழிவாயாக ஆமீன்

  29. hown says

    Alhamthulillah…
    ella puhalum Allaah oruvanukkea…

  30. Malik says

    இன்ஷா அல்லா, யுவன் அவர்களுக்கு அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..

  31. sheik says

    Masha allah

  32. Heena fayaz says

    Alhamdhulila..

  33. habeeb rahman says

    Masha Allah….

    In sha allah, may Allah show him the path to Islam.
    As we all know that Islam is the fastest growing religion in the world and famous people are no exception. So we must pray him and all the other non-muslim brothers and sisters.

  34. Ashik Basheer says

    Allahu Akbar, Allah chooses people to worship him. There is something in Yuvan that Allah loves. May Allah protect Yuvan from all evils and make him a Daayi. Aameen.

  35. Sdeen says

    மாஷா அல்லாஹ் …இரண்டு வாரங்களுக்கு முன்பு மலேசிய தலைநகரில் டாருள் அர்க்கம் சென்று அதிகாரப்பூர்வமாக தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார் !

  36. Taher Ali says

    Welcome to Islam. Your heart will find calm only by remembering Allah alone without associating anyone. May Allah Guide you to True Faith.

  37. veeramani says

    i am working in Saudi Arabia…i am hindu…i am also use this words inshallah masha allah…i am also like way the of praying in mushlims..but i didnt pray like this..i cant change from one community to another…i am also reading Quaran..why there is any condition is there if we want read quaran we should convert to musilim.

    1. Khalid says

      சகோதரர் வீரமணிக்கு,குரானை படிபதற்கு இஸ்லாத்தை ஏற்ற பிறகுதான் படிக்கணும் என்ற அவசியம் இல்லை.நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்ககள் உலகின் படைப்பு,உரிணங்கள்,இயற்கை இவை எல்லாம் படைத்தது ஒரு இறைவனா அல்லது பல…!.112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
      112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

      குர்ஆன்2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

    2. Khalid says

      4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

    3. AbdRauf says

      U asked a good question bro… here is answer….If u r hindu means u accepted many gods ,and u accepted worshiping statue…. but if u read Al-Quran it clearly states that one who worships the only one god(unique) who have no partner,no forms, no other equality to him…. he is a muslim or else he is not muslim.. he is an ignorer of god(Allah)and his holy book Quran… Allah is an arabic word of “GOD”…it doesnt refers to a person or thing or light,.. Allah really speak through his Quran… of corz quran is a message… and try to understand the message allah wants to convey to u… you wll understand what islam is..and why there is condition to be a muslim to read quran…. kindly ask more question if u have any doubts… -AbdRauf

    4. liyakath says

      There is No condition to read Holy kuran for anybody. It is available in the Internet.

    5. Haroon says

      Hello bro! Nice to read ur question. Thrre is no condition like that.. if u want to read qur’an, u can read it before u convert to islam.. Qur’an is a holy is Holy book (Words of Allah). Allah is creator for everything. So, there is no such condition in islam that only muslims should read it.

  38. jay says

    is that true ? I dont think so……

  39. ABBAS says

    MAASHA ALLAH

  40. liyakath says

    இந்த செய்தியை படித்தவுடன் இறைவனின் அருளை எண்ணி என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். சில காலங்களாக நான் முஸ்லிம்களின் மீது பரப்ப படும் அவதூறு பிரசாரங்களால் இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் (இறைவனை தேடுபவர்களுக்கு) உண்டாகிவிடுமோ என கவலை இருந்தது. உண்மையான உள்ளதோடு இறைவனை தேடுபவர்களுக்கு இறைவனின் உதவி எப்பொழுதும் உள்ளது. யுவனுக்காக பிராத்தனையும் (சத்தியத்தில் இருந்து பிறழாமல் இருக்க), இறைவனுக்கு நன்றியையும் செலுத்துங்கள். இறைவன் தான் நாடியவருக்கு நல் வழி காட்டுகிறான். இந்த உலக விஷயங்களை பற்றி கவலை கொள்ளாமல் நேர் வழியையை பின் பற்றுவோம்.

  41. mohamed kasim says

    நாம் என் பிறந்தோம் என்பதை சிந்திக்கும் எவரும் இஸ்லாத்தில் இணைவது உறுதி! http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_18.html

  42. Robert says

    யுவனின் மனைவி இன்னும் இந்து மதத்தில் இருக்கின்றார். அவர் மதம் மாறும்படி இஸ்லாமிய வாகாபிய வெறியர்கள் நிற்பந்திப்பார்களா? அல்லது அவரை விவாகரத்து செய்ய தூண்டுவார்களா?

    யுவனின் அப்பா , சகோதரி , அண்ணா இந்துக்கள் . காபிர்களான அவர்களுடன் எந்த நெருங்கிய தொடர்பும் அவைத்திருக்க கூடாது என்று வகாபிய வெறியர்கள் தூண்டுவார்களா ?

    யுவன் சங்கர் ராஜா இந்து மதப்பெயர். இந்த பெயரை மாற்றும் படி வகாபிய வெறியர்கள் தூண்டுவார்களா ?

  43. ameer says

    masha allah. if u embraces islam i will lead to peace.

  44. mohamed kasim says

    இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மக்கள் எதிர்க்கக் காரணம் என்ன?
    http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_24.html

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்படியா ஏமாத்துவீங்க…? வெங்கட்பிரபுவை காய்ச்சிய ஹன்சிகாவின் அம்மா!

பிரியாணி திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. அப்படத்தின் ரிசல்ட் பற்றியெல்லாம் நாம் சொல்லப் போவதில்லை. ஆனால் அதில் நடித்த ஹன்சிகா மோத்வானியே கவலைப்படுகிற அளவுக்கு பொளந்து...

Close