‘ ஈழத் தமிழர்களை வச்சு அரசியல் பண்ணாதீங்க… ’ ராஜ்கிரண் கொந்தளிப்பு

‘கழுகு’ படத்தின் போதே கவனிக்கப்பட்டவர் டைரக்டர் சத்யசிவா. இவரது அடுத்த படைப்பான ‘சிவப்பு’ வெளிவரும்போது சில அரசியல்வாதிகளின் முகம் வெளுத்துப் போனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம், ஈழ அகதிகளின் சோகம்! ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் வந்து குடியேறிய ஒரு பெண்ணுக்கும் இங்கிருக்கும் ஒரு வாலிபனுக்கும் ஏற்படும் காதல், அதை தொடர்ந்த சிக்கல்கள் என்று போகிறதாம் கதை. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட ஒரு ட்ரெய்லர் அசர வைத்தது நிஜம் என்றால், வசனங்கள் ஒவ்வொன்றும் நெருப்பு துண்டுகள்.

ட்ரெய்லரின் இறுதியில் ராஜ்கிரண் பேசும் ஒரு வசனத்திற்கு அந்த இடத்திலேயே கைத்தட்டல்கள். ஈழ அகதிகளை பற்றி பேசுகிற ராஜ்கிரண், ‘ஒண்ணு அவங்களை முழுசா ஆதரிங்க. இல்லேன்னா கைவிட்ருங்க. இப்படி அவங்களை வச்சு அரசியல் பண்ணாதீங்க’ என்கிறார் அவருக்கேயுரிய அழுத்தமான குரலோடு. இப்படி படம் நெடுக பேசப்படுகிற வசனங்கள், சவுக்கடிக்கு நிகரானவையாக இருக்குமாம். இந்த படத்தை நான் எடுக்கும்போதே இங்கு நீங்க சென்சார் வாங்க முடியுமான்னு நெகட்டிவா கேட்டவங்கதான் அதிகம். ஒரு கட் கூட இல்லாமல் படத்தை வெளியில் கொண்டு வரும் நம்பிக்கை இருக்கிறது என்றார்.

எல்லா பாடல்களையும் சினேகன் எழுதியிருக்க, சடுகுடு கண்கள் என்கிற பாடலை மட்டும் வைரமுத்துவின் மகன் கபிலன் எழுதியிருக்கிறார். நானும் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிட்டேன். சில பாடல்கள்தான் எனக்கு பிடிச்ச பாடல்னு சொல்ற மாதிரியிருக்கும். அந்த வரிசையில் இந்த படத்தின் பாடல்கள் அமைஞ்சுருக்கு. நானும் என் குருநாதர் வைரமுத்துவும்தான் ஒரே மேடையில் அமரக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்கல. ஆனால் அவரது மகன் கபிலனும் நானும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது எனக்கு சந்தோஷமா இருக்கு என்றார் சினேகன். அதுமட்டுமல்ல, இந்த படம் இப்படி வரும்னு தெரிஞ்சுருந்தா நடிக்கறதுக்கு ஒரு ரோல் கொடுங்கன்னு கூச்சப்படாமல் கேட்டு வாங்கியிருப்பேன். தவற விட்டுட்டேனே என்றார் கவலையோடு.

திருதிருதுருதுரு படத்தில் அறிமுகமான ரூபா மஞ்சரிதான் இந்த படத்தில் ஈழப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதுவரை கவனிக்கப்படாமலிருந்தவரை இனி பாலாவே கூட திரும்பி பார்ப்பார் என்று உறுதியாக சொல்லிவிடலாம். அப்படியொரு முக பாவம்….

படத்தின் தலைப்பு வேண்டுமானால் சிவப்பு என்று இருக்கலாம். இதில் சம்பந்தப்பட்ட அத்தனைபேருக்கும் இந்த படம் கிரீன் சிக்னல்தான்!

Sivappu will showcase the lives of Sri Lankan refugees

Sivappu directed by Sathya Siva who earlier directed ‘Kazhugu’ will bring out the trials and turbulences of Sri Lankan refugees in Tamil Nadu. The trailer which was released was packed with powerful dialogues and brilliant scenes. Speaking about the film the director said that the film revolves around the life of a Sri Lankan refugee girl and her love with a local lad which resulted in multiple complications and problems. Siva has written powerful dialogues in the film and showcased one such dialogue in the trailer with Raj Kiran in his high and emotional tone says, “Don’t do politics with Sri Lankan refugees – either you accept them or abandon them”. He is confident that he would get a clean censor board certification without any cut or hassle.

Snehan who penned all the songs but for one has said all the songs have come out nicely. He expressed his happiness in sharing the stage with Ma. Kabilan, though he could not share the stage with his guru Vairamuthu. “Had I known that the film would come out with such brilliance, I would have requested the director to give a chance to act in the film” he lamented. Ma. Kabilan, the son of poet Vairamuthu wrote the other song ‘Sadu Gudu Kangal’ in the film.

Thiru Thiru Thuru Thuru Roopa Manjari is the heroine of the film and she has expressed her nicely in the film, going by the scene in the trailer.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஹன்சிகாஜி… ’ மரியாதை ராமனான சிவகார்த்திகேயன்

lide வாங்க ஜி... போங்க ஜி... என்று சக நண்பர்களை அழைக்கும் ஹீரோக்கள், தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை மட்டும் அப்படி அழைப்பதேயில்லை. என்ன நினைத்தாரோ... சிவகார்த்திகேயன் ஹன்சிகாவை...

Close