ஈழப்பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா

‘நஸ்ரியாவே… நடிப்பை விட்றாதீங்க…..’ என்று அவரது ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் என்று கான்பிடன்ட்டாக பேட்டியளித்த நஸ்ரியா, தனது அடுத்தடுத்த படங்களில் இருந்து சைலன்ட்டாக ‘கழன்று’ கொண்டு வருகிறாராம். கேட்டால், மாமனார் வீட்ல பர்மிஷன் இல்லே என்று வருகிறது பதில். இதனால்தான் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்.

நடித்தால் நஸ்ரியா, இல்லேன்னா அந்த கேரக்டரே படத்துல இல்லேன்னாலும் பரவால்ல என்கிற அளவுக்கு நஸ்ரியாவின் நடிப்பு மீது தாங்ககொணா நம்பிக்கையில் இருந்தாராம் அவர். கதை திரைக்கதை இயக்கம் படத்தில்தான் நஸ்ரியாவுக்காக அப்படியொரு கேரக்டர் வைத்திருந்தார் அவர். ஆனால் போகிற போக்கில் அவரது நம்பிக்கையில் நாலைந்து ‘அண் லைக்’தான் விழும் போலிருக்கிறது.

பார்த்திபன் படத்தில் ஈழப் பெண் ஒருவராக நடிக்கிறார் நஸ்ரியா. அவரும் இந்த கேரக்டருக்காக மட்டும்தான் இந்த படத்தில் நடிக்கவே சம்மதித்திருந்தாராம். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் அந்த காட்சியை படம் பிடிக்கவில்லை. காதலுக்கு முன் அவரை கமிட் பண்ணிய பார்த்திபன், இப்போதும் நஸ்ரியாவுக்காகதான் காத்திருக்கிறார். மாம்ஸ் வீட்ல பார்த்திபனுக்காக நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வார்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

Parthieban is anxious about Nazriya’s call sheet!

Director-Actor-Producer Parthieban is worried man as he is feeling uncomfortable with the silence from Nazriya’s dates. Parthieban who roped in Nazriya to don the character of a Sri Lankan girl in his upcoming film Kathai, Thirai Kathai, Vasanam, Iyakkam, before her engagement to Faahad Fasil, is not sure of the dates as to when he could direct the portion of the actress. Though Nazriya spoke confidently about her acting even after the marriage is being pressurized by her would be in-laws family, not to don the grease paint henceforth. Since Nazriya too is equally committed to act, it remains to be seen if she would continue to acting, and whether Parthieban would be able to shoot her portions to his satisfaction. Sources say that the character Nazriya plays in the film is a vital one and the director roped in Nazriya as he was convinced of her acting prowess to suit the character.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருமலானது கர்ஜனை?

வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச மாதிரி ஆகிருச்சு லிங்குசாமியின் இன(ம்) பற்று. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘இனம்’ படத்தை...

Close