“உங்களாலதான் எல்லாம். பேட்டி கிடையாது போங்க…!” – சேனல்காரர்களிடம் கோபப்பட்ட விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி எந்த மேடைக்கு வந்தாலும், ‘தலைவா…’ என்று கூச்சலிட்டு கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஒரு தலைவனுக்குரிய இலக்கணத்தை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் அவரும். அப்படின்னா? ‘போங்கய்யா… என்னால முடியாது’ என்று சொல்ல கற்றுக் கொண்டார் என்று அர்த்தம். சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவர் செய்த கலாட்டாக்களை முதன்முதலில் வெளிப்படுத்தியிருந்தது நமது newtamilcinema.in இதில் சற்றே அப்செட் ஆன விஜய் சேதுபதி, தன்னிடம் இது குறித்து விளக்கம் கேட்ட நண்பர்களிடம் ‘கொஞ்சம் ஓவராயிருச்சுப்பா…’ என்று மட்டும் கூறினாராம்.

ஒரு சேனல் அறிமுக விழா பார்ட்டியில் அவர் நடந்து கொண்ட விதத்தைதான் நாம் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையில் அதே சேனல், தீபாவளி நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதியை அணுகியதாம். அவர்களிடம் கோபத்துடன் பேசிய அவர், ‘என்னை வேணும்னு கூப்பிட்டு வச்சு அவமான படுத்திட்டீங்க. அந்த செய்தியை அந்த இணைய தளத்திற்கு சொல்லி எழுத வைத்ததே நீங்கதான்’ என்று கோபித்துக் கொண்டாராம். விஷயம் அந்த கோபத்தோடு முடிந்திருந்தால் ஓ.கே. ஆனால் ‘உங்களுக்கு இப்ப மட்டுமில்ல, இனிமே எப்பவுமே பேட்டி தர மாட்டேன்’ என்று கூறி அனுப்பிவிட்டதாக தகவல்.

ஆஹா… விஜய் சேதுபதியும் வர வர விஜய்யா மாறிகிட்டு இருக்காரே?

Vijay Sethupathi learning to become a ‘leader’ or ‘a hero’?

Our website has filed the news report first, on Vijay Sethupathi’s ruckus at a Star Hotel recently, while attending the inauguration of a TV Channel. The TV channel approached him for an interview with the actor, for Diwali special. Angry Vijai told the channel that they have intentionally spoiled his reputation by giving the story to the website, and would never give any interview for the channel, ever. Well! Vijay Sethupathi has learnt to say ‘NO’ like that his contemporaries thus making the issue linger eternally! He is developing himself to be a potential politician of the future, perhaps!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்…’ – அஜீத் உத்தரவால் சினிமாக்காரர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து!

நடிகர் நடிகைகளுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்ட காட்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் நமக்கும் அழைப்பு வரும் என்று காத்திருந்த...

Close