‘உங்களுக்கு எப்படி ஒரு ஸ்பிரிச்சுவல் வழி இருக்கோ, அது மாதிரி எனக்கும் ஒண்ணு இருக்கு’ – இளையராஜாவிடம் வாதம் செய்த யுவன்

2013 டிசம்பர் 30 ந் தேதி ‘இஸ்லாமியராகிறார் யுவன்’ என்ற தலைப்பில் நமது இணையதளத்தில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். (https://wh1049815.ispot.cc/2013/12/2853/) தமிழ்சினிமாவுலகத்தையும் உலகம் முழுவதும் இருக்கிற யுவன் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கிய கட்டுரை அது. இது தொடர்பாக யுவனை தொடர்பு கொள்ளவும் முயன்றோம். நம்மை போலவே பல்வேறு பத்திரிகையாளர்கள் அவரை தொடர்பு கொண்டு இந்த செய்தி தொடர்பான கேள்விகளை கேட்க ஆர்வமாக இருந்தார்கள்.

ஆனால் யாருடைய தொடர்பு எல்லைக்குள்ளும் யுவன் இல்லை. ஆனால் தனது நெருக்கமான நண்பர்களிடம் மட்டும், ‘மதம் மாறுன விஷயத்தை நானே அறிவிச்சுடலாம்னு இருக்கேன். டைம் வரும்போது அறிவிப்பேன்’ என்று கூறிவந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டரில், தான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

எப்படி மாறினார் யுவன்?

தொடர்ந்து அவருக்கு விதவிதமான கனவுகள் வர ஆரம்பித்தனவாம். அந்த கனவுகளை முதலில் அலட்சியமாக கடந்து போன அவருக்கு ஒரு கட்டத்தில் இதில் ஏதோ விஷயம் இருப்பதாக புலப்பட, இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர் ஆனை படிக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கப்புறம் எனக்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தது. நான் மெல்ல மெல்ல இஸ்லாமை நேசிக்கவும் வணங்கவும் ஆரம்பித்தேன். எனது இரண்டாவது மனைவி நான் முஸ்லீமாக மாறுவதை ஏற்கவில்லை. அதன் காரணமாக நான் அவரை விவகாரத்து செய்யவிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் யுவன்.

அப்பா இளையராஜா என்ன சொன்னார்?

ஒரு தந்தையிடம் இதை தெரிவிக்க வேண்டியது கடமையாயிற்றே? அவரிடம் இந்த விஷயத்தை பக்குவமாகவும் தயக்கத்துடனும் சொன்னாராம் யுவன். முதலில் அதிர்ச்சியான இளையராஜா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். ஆனால் அவரிடம் வாதம் செய்த யுவன், ‘உங்களுக்கு எப்படி ஒரு ஸ்பிரிச்சுவல் வழி இருக்கோ, அது மாதிரி எனக்கும் ஒண்ணு இருக்கு’ என்று வற்புறுத்த, ஒருகட்டத்தில் ராஜாவும் அமைதியாகிவிட்டாராம்.

யுவனின் இஸ்லாமிய பெயர் என்ன?

அதை இன்னும் அவர் அறிவிக்கவில்லை. கிட்டதட்ட 100 படங்களை யுவன் சங்கர் ராஜா என்ற பெயரிலேயே கடந்துவிட்ட அவருக்கு, ஒரு திடீர் பெயர் வந்து பின் அதுவே நிலைப்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல. இருந்தாலும் இன்னும் சில தினங்களில் இதே ட்விட்டர் மூலம் தனது பெயரை அறிவிக்கும் முடிவிலிருக்கிறார் அவர்.

வருத்தம்?

நண்பரும் நடிகருமான கிருஷ்ணாவின் திருமணத்தில் நண்பரின் மனைவியோடு நின்றிருக்கிற புகைப்படத்தை வெளியிட்டு அதை என் மனைவி என்று எழுதியிருக்கிறார்கள். அதுதான் வருத்தம் என்று புலம்பும் யுவன், எனக்கு மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார்.

அல்லா என்ன நினைத்திருக்கிறாரோ?

Yuvan Shankar Raja announces embracing Islam!

We have run a story that Yuvan Shankar Raha has turned to Islam for ‘peace’, on 30th Dec. 2013. On reading the story like us, everyone in film industry as well as the public were surprised and dismayed; and some might not have believed our story even. We tried to contact Yuvan, but he was beyond our reach. So are the other journos who tried to reach him for his comments.

However he has informed his friends that he would announce his conversion to Islam at the appropriate time.

But to the surprise of many Yuvan took to his twitter page to announce that he has in fact embraced Islam, and he has not married for the 3rd time.

Why Islam for Yuvan?

When a person is depressed he loses faith in life and self confidence. During that period whoever or whichever has given solace and comfort to regain his strength and confidence will be the person’s saviour and he would from then on continue to have staunch belief on the person or on the subject. Yuvan found his peace and comfort in Islam by reading and reading continuously the holy book ‘Quran’. He regained his self confidence and found what he was looking for in life. It is said that since his 2nd wife did not agree for change of religion, he was then planning to get a divorce from her, said sources who are in know of him.

How Yuvan convinced his father?

When Yuvan though it was time that he should convert his religion, he went to his father to inform his mind and his decision. On learning his decision, his father Ilayaraja did not approve and was against him. But Yurvan persisted and tried to convince him. He seemed to have argued to his father, ‘like how he has a staunch believe in his spiritualism, he too found the same believe in Islam, and hence the decision’. Ilayaraja and other members of the family understood the firmness in Yuvan’s decision, and have respected his decision.

On change of his name?

Though Yuvan is popular by his name having scored over 100 films in composing music, he is determined to make his conversion complete by changing his name. It is heard that he would once again takes to twitter to announce his name.

Feeling sad for the wrong quote

Yuvan recently attended director Vishnuvardhan’s brother, actor Kreshna’s marriage when he was photographed with his friend’s wife standing by the side of him. This was misinterpreted by journalists who pointed out that was his 3rd wife. Yuvan immediately clarified that it was indeed his friend’s wife, and he was not married to the 3rd time. He added that he was sad seeing such comments hurting other’s sentiments. He said that he is not planning to get married again.

What is Allah’s intent? He only knows.

1 Comment
  1. mohamed kasim says

    நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியோ அழைக்கவில்லை. மாறாக அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால் தான் அழைத்தார்.
    = ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களே. குலமோ, இனமோ மொழியோ நிறமோ இடமோ உங்களைப் பிரித்துவிடக் கூடாது. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் சுரண்டிக் கொண்டும் மோசடி செய்தும் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் என் சமுதாயமே! வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்! ஒரு இனிய புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்! இந்த குறிக்கோளை அடைய நீங்கள் மறந்துபோன சில உண்மைகளை நினைவூட்டி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கவே நான் இறைவனால் அனுப்பப் பட்டுள்ளேன்.
    மறுக்கமுடியாத உண்மைகள்
    = நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை எதுவெனில் இவ்வுலகத்தை படைத்த இறைவன் ஒரே ஒருவனே என்பதும் அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதுதான். அவன்தான் நமக்கு தன் புறத்திலிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி நம்மை பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமே நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளை ஏற்பவனும் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனது படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதும் எல்லாம் இறைவனை சிறுமைப் படுத்தும் செயலும் வீணும் மோசடியும் ஆகும். எனவே பொய்யான தெய்வங்களை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவன்பால் வாருங்கள்.
    = அடுத்த உண்மை – இவ்வுலகம் தற்காலிகமான ஒரு பரீட்சைக்கூடம் போன்றது. இதில் நீங்கள் இறைவனின் வழிகாட்டுதல்படி அவன் கூறும் நன்மைகளைச் செய்தும் அவன் கூறும் தீமைகளில் இருந்து விலகியும் வாழ்ந்தீர்களானால் உங்கள் தனி நபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியைக் காண முடியும். அவ்வாறு நீங்கள் படைத்தவனுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தீர்களானால் அதற்குப் பரிசாக அவன் மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்கத்தில் உங்களைப் புகுத்துவான். மாறாக அவனுக்குக் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தீர்களானால் அதற்கு தண்டனையாக மறுமையில் நரகத்தையும் வைத்துள்ளான்.
    = இந்த மறுக்கமுடியாத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவன் நமக்காக வகுத்துத் தந்துள்ள அழகிய வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் வாருங்கள்.
    எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத் திட்டத்தின் பால்தான் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை அழைத்தார்கள்.
    ஆனால் என்ன நடந்தது?
    http://quranmalar.blogspot.in/2014/02/blog-post_11.html

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்தானமே, குரைப்பதை நிறுத்திக்கொள்! நமது வாசகர்களுக்காக அந்த ஒரிஜனல் மிரட்டல் கடிதம்

  விஷால், சந்தானம், நாசர் ஆகிய மூவருக்கும் மிரட்டல் கடிதம் வந்திருப்பதை வாசகர்கள் நன்றாக அறிவார்கள். அந்த கடிதத்தின் போட்டோ பிரதியை நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக எக்ஸ்குளூசிவாக...

Close