உதயநிதிக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சி
கமலின் விஸ்வரூபம் பார்ட் 2 எப்போது வரப்போகிறது என்பதை முடிவு செய்துவிட்டாரா கமல்? அந்த தேதி வரும்போது பரபரப்பும் நிச்சயம் என்கிறது கோடம்பாக்கம். இப்பவே முஸ்லீம் அமைப்புகள் இப்படத்தை கண்கொத்தி பாம்பாக கவனிக்க தொடங்கிவிட்டன. தொழில் நுட்ப ரீதியாக முந்தைய விஸ்வரூபத்தை விட இது பன்மடங்கு பாய்வதாக குறிப்பிடுகிறார்கள் இந்த செகன்ட் பார்ட் ட்ரெய்லரை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்ற வி.ஐ.பிகள். இந்த முறை விஸ்வரூபம் பார்ட் 2 வை வாங்கி வெளியிட தயாராக இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.
இதற்காக அவருக்கு ட்ரெய்லர் போட்டு காண்பிக்கப்பட்டதாக தகவல் உலவுகிறது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் தனது ட்விட்டரில் விஸ்வரூபம் பார்ட் 2 பற்றி வியந்திருக்கிறார் அவர். இந்த ட்ரெய்லரோடு ஒப்பிட்டால் முதலில் வந்த விஸ்வரூபம் ஒன்றுமே இல்லை என்று அவர் குறிப்பிட்டதுதான் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
ஆனால் இப்படத்தை உதயநிதிக்கு கமல் கொடுக்க மாட்டார் என்றும், அப்படி கொடுக்க நேர்ந்தால் ஆளுங்கட்சியின் பகையை சம்பாதிக்க நேரிடுமே என்தால்தான் இந்த முடிவு என்றும் கூடவே கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இப்போதெல்லாம் கமல் என்கிற படைப்பாளிக்கே சவால் விடுகிற அளவுக்கு அவருக்குள்ளிருக்கும் வியாபாரி தலையெடுத்துவிட்டார். அதனால் எல்லாம் கமல் மயம். அதுவும் வெற்றி மயம் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான்.
Kamal – Udhayanidhi Stalin may join for Vishwaroopam 2
Vishwaroopam 2 trailer though ready for release, Kamal seems to have held it back for his own reasons. But Udhayanidhi Stalin was amongst the august guests to whom the trailer was shown. Udhaya tweeted expressing his awe for the trailer saying it exceeds Vishwaroopam by several notches. With this background there seems to be a strong likelihood of Udhyanidhi acquiring distribution rights for the film, though nothing as such materialise. Sources also indicate that Muslim groups are burning midnight lamps on this film who may revolt once again. Also if Udhayanidhi gets the distribution rights Kamal has to face the wrath as well as non-cooperative state government in case of a revolt. Kamal will make his shrewd businessman technique to come out with flying colours, one hopes.