உதவி இயக்குனர் கதாநாயகன் ஆனார் – மகேந்திர பூபதி இயக்கத்தில் “ நனையாத மழையே “

கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப்  படத்தில் அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49  – O  என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, மாஸ்டர் கபிலேஷ்கணபதி, செல்வி சக்தி ஷிவானி ஆகியோருடன் கானாபாலா முக்கிய வேடமேற்கிறார்.

ஒளிப்பதிவு      –   கிச்சாஸ்.. இவர் அரண்மனைக்கிளி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

இசை   –  சௌந்தர்யன்

பாடல்கள்   –     நா.முத்துகுமார், அறிவுமதி, சீர்காழி சிற்பி

நடனம்   –    தினேஷ்

ஸ்டன்ட்       –    ஸ்பீட் மோகன்

எடிட்டிங்       –     V.ஜெய்சங்கர்

தயாரிப்பு மேற்பார்வை      –  சிவா

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மகேந்திரபூபதி.

படம் பற்றி இயக்குனர்  மகேந்திரபூபதியிடம் கேட்டோம்…

காதல் என்பது இன்று இல்லை என்றுமே நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போன விஷயம்..

காதல் சாவதற்காக அல்ல ..சாகும்வரை வாழ்வதற்கே  என்கிற ஒன்றே முக்கால் அடி திருக்குறள் மாதிரியான வரிகளை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்துள்ளோம்.

படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கேரளா, அன்னூர், சாலக்குடி, மற்றும் மூணார் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் மகேந்திரபூபதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷை உச்சி முகர்ந்த ரஜினி…!

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய...

Close