உதவி இயக்குனர் கன்னத்தில் பளார்…. படப்பிடிப்பில் கோபப்பட்ட தனுஷ்!
‘கோபக் குறைப்பு பானம்’ ஏதாவது இருந்தால் தினம் ஒரு லிட்டர் வீதம் கலக்கிக் கொடுக்கலாம் தனுஷுக்கு. அவ்வளவு எரிச்சல் படுகிறாராம் அண்மைக்காலமாக. இந்த அவஸ்தையை அதிகம் அனுபவிப்பது அப்பாவி உதவி இயக்குனர்கள்தான்.
நீண்டகாலமாகவே இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவிலிருக்கும் தனுஷ், அதற்காக சொந்த காசில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதை சினிமாவுலகம் அறியும். அப்படி கரைக்கப்பட்ட மஞ்சள் தண்ணிக்கு தலையை காட்டிய அப்பாவி ஆடுதான் அவரது உற்ற நண்பரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ். பொல்லாதவன் காலத்திலிருந்தே தனுஷ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜ் மனசிலும் ஒரு இயக்குனர் கனவு இருக்கிறது. அவரது கனவை தனக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தனுஷ், தடபுடலாக துவங்கிய படம்தான் வேலையில்லா பட்டதாரி.
இந்த படத்திற்கு வேல்ராஜ்தான் டைரக்டர். ஆனால் ஒரு இயக்குனர் செய்யும் எல்லா வேலைகளையும் தனுஷ்தான் செய்கிறாராம். அப்படியொரு வேலை நேரத்தில் நடந்த வேதனை சம்பவம்தான் இது. காலையில் படப்பிடிப்புக்கு வந்த தனுஷ், ‘கிளாப் போர்டு எங்கேப்பா? என்றொரு அசிஸ்டென்ட் டைரக்டரிடம் கேட்க, வேறு ஏதோவொரு வேலையாக ஓடிக் கொண்டிருந்த அந்த உ.இ ‘இங்கதான் சார் எங்காவது இருக்கும். தேடிப்பாருங்க’ என்றாராம். அவ்வளவுதான்… கோபமும் முன் மூக்குக்கு வந்துவிட்டது தனுஷுக்கு. ஓடிக்கொண்டிருந்த உதவியை பின்னாலேயே விரட்டிச் சென்று பின் மண்டையில் பொடேரென இறுக்கினாராம். அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன உதவியிடம், ‘என்னா மரியாதை இது? கேட்டால் எடுத்து கொடுத்துட்டுதான் அடுத்த வேலையை பார்க்கணும், புரியுதா?’ என்று அதட்ட, ‘சரி ஸார். ஸாரி சார்…’ என்றாராம் அவர்.
ஏகலைவனா பொறந்தாலும் சரி, பொறக்காட்டாலும் சரி, கட்ட விரல காவு கொடுக்க தயாராக இருக்கணும். சில நேரங்களில் மானம் மரியாதையையும்! இது புரிஞ்சவங்கதான் எதிர்கால இயக்குனர்கள்.
Dhanush slaps Assistant Director on the sets!
Dhanush who is producing Velai Illa Pattadhari under his home banner, directed by Cinematographer turned director Velraj. Dhanush helps the director in his activities during the shoots, as part of learning curve for him to understand the nuances of direction. However at the same time he should also control venting his anger on the members of the staff. Dhanush when he was on the sets for the shoot asked an assistant director “where is the clap board”? The assistant director, while on the move, casually answered him saying it will be lying somewhere here, please look for it. Enraged by his casualness he went behind the AE and hit him at the back and told him to mind to give proper answer with respect. AE immediately regretted and apologised. Yes what AE did was not proper and so was Dhanush. He could have called him and admonished him for his improper act. Instead slapping or beating is very much improper especially for people who are depicted as good ones in films.
அப்படி கரைக்கப்பட்ட மஞ்சள் தண்ணிக்கு தலையை காட்டிய அப்பாவி ஆடுதான் அவரது உற்ற நண்பரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ்/
nice example sir
If you are a director and if u respect film making, what Dhanush did was ABSOLUTElY right. By the way, am not a dhanush fan and me too an aspiring director.