உலகின் பழமையான வானிலை அறிக்கை எகிப்தில் கண்டுபிடிப்பு

வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்வெட்டு 18வது பரோ வம்சத்தை சேர்ந்த அமோஸ் வாழ்ந்த காலத்தை சேர்ந்தது. ஆறு அடி உயரம் கொண்ட அந்த சுண்ணாம்புக் கல்வெட்டு “டெம்பஸ்ட் ஸ்டெலா” என்று அழைக்கப்படுகிறது. அதில் மழை, கருமேகம் உள்ளிட்ட மாறுபட்ட காலநிலை அமைப்புகள் பற்றி 40 வரிகள் அடங்கிய குறிப்பு காணப்படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல்துறை பேராசியர்கள் ராபர்ட் ரிட்னர் மற்றும் நாடின் மோயல்லர் ஆகியோர் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில், எகிப்தின் தெரா பகுதியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வது போன்ற காலநிலை அமைப்பு அந்த கல்வெட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு குறிப்புகளில் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். அதுவே இன்றைய மெடிடீரியனின் கடலில் சான்ரொனி தீவாக காட்சியளிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், இந்த கல்வெட்டில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களை வைத்து அதன் காலவரிசை முறையை கணக்கிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்…. – முருகன் மந்திரம்

சினிமாக்காரிகள்ன்னு சொன்னதும் நமீதா, நயன்தாரான்னு வகை வகையா… உங்க ரசனைக்கு ஏத்தமாதிரி யார் யார் முகமோ உங்க கண்ணுக்குள்ள வந்து போகும்… முகம் மட்டுந்தான் வந்து போகுமான்னு…...

Close