உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில்  வீரு இயக்கும்  “ மைதிலி & கோ “

கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ”  இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர்2011 ல்  நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.

மற்றும் இந்த படத்தில் பாண்டியராஜன், சுமன், துப்பாக்கி படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர்உசேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  சி.ராம்       /  கலை    –  பாப்ஜி

ஸ்டன்ட்    –  மாஸ்மாதா  / பாடல்கள்    –  சினேகன், இந்து

வசனம்    –  வேலுமணி   /  நடனம்   –  பிரேம்ரஷித்

எடிட்டிங்   –  ரகு

இசை, இயக்கம் –  வீரு.கே

தயாரிப்பு  –    கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட்.

படம் பற்றி இயக்குனர் வீரு.கே கூறியது….

இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட படம். சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும். ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்த படம் தயாரிக்கப் பட்டுள்ளது.

நாயகியை மையப்படுத்தி  முழுக்க முழுக்க கதை உருவாகப் பட்டுள்ளது.

நாயகி இருக்கும் ஊரில் தீவிர வாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள் இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை முரியடித்தாரா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது.

படப்பிடிப்பு  முழுவது அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.  மிக விரைவில் இந்த படம் உலக முழுவது வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

Read previous post:
Aambala foreign songs stills

Close