உளறினார் டைரக்டர்… – நன்றாக மூக்கை அறுத்தார் ஹீரோ
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது ‘ஞானக்கிறுக்கன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. செல்போன் விழுந்தால் சிம் கார்டு நொறுங்கிப் போகிறளவுக்கு கூட்டம். பாரதிராஜா, செல்வமணி, தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.சிவா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த அந்த விழாவுக்கு எஸ்.எஸ்.ஸ்டான்லி என்கிற நபரையும் அழைத்திருந்தார்கள். பொதுவாக இது மாதிரி அடையாளம் தெரியாத நபர்களையெல்லாம் மேடைக்கு அழைத்தாலும் மைக்கை கொடுப்பது ஃபங்ஷன் வழக்கமல்ல. கஷ்டப்பட்டு திரட்டிய கூட்டத்தை loos பண்ண வேண்டாமே என்பதால்தான் இந்த ஐடியா.
ஆனால் இந்த விழாவுக்கு வந்திருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி, இவரையும் அழைத்து மைக்கை கொடுத்துவிட, உளறித் தள்ளினார் இந்த நபர். இந்த படத்தின் ஹீரோவான டேனியல் பாலாஜியை பார்த்து, ‘நான்தான் உங்களுக்கு முதன் முதலில் சான்ஸ் கொடுத்தேன். இன்னைக்கு நீங்க வளர்ந்து வர்றதை நினைச்சா பெருமையா இருக்கு’ என்றார்.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களில் வில்லனாக நடித்திருக்கும் பாலாஜி, இயல்பாகவே முகத்திற்கு நேரே பொட்டென்று அறைகிற ரகம். பேசியது யார்? அவர் சின்னவரா, பெரியவரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். படத்திலும் இவருக்கு இதே மாதிரி கேரக்டர்தான். ஸ்டான்லி பேசிவிட்டு சீட்டில் அமர்ந்ததும் இவரை பேச அழைத்தார்கள். ‘ஸ்டான்லி சார்… எனக்கு நீங்க வாய்ப்பு கொடுக்கல. அதுக்கு முன்னாடியே நான் நடிக்க வந்துட்டேன். என் படங்களை பார்த்துட்டுதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தீங்க’ என்று பொட்டென சொல்லால் அறைய, கன்னத்தை பிடித்துக் கொண்டு கப்சிப் ஆகிவிட்டார் இந்த ஆசாமி.
சரி போகட்டும்… இந்த படத்தில் டேனியல் பாலாஜிக்கு என்ன கேரக்டர் தெரியுமா? படத்தின் டைரக்டர் இளையதேவனின் அப்பாவை அப்படியே திரைக்கு கொண்டு வருகிற வேலை. ஊரில் எல்லாருமே இவரது அப்பாவை பார்த்தால் அலறுவார்களாம். எப்போது யாருக்கு அடி விழும். எப்போது யாரிடம் அன்பு காட்டுவார் என்பதே தெரியாதாம். ஷுட்டிங்குல அவரை மாதிரியே மேக்கப் போட்டுட்டு போய் நிக்குறேன். ஊர் ஜனமே என்னை பார்த்து பயப்படுது. அப்புறம் நானே அவங்க அப்பாவை பார்த்து பயப்பட ஆரம்பிச்சுட்டேன் என்றார் டேனியல்.
இந்த பொல்லாத அப்பாவை விழாவுக்கு அழைத்து கவுரவமாக உட்கார வைத்திருந்தார் டைரக்டர் இளையதேவன். ஒரு முழு படத்துக்கான தீம் கொடுத்தவராச்சே!
Read article in English-