‘உழவன் தாத்தா வந்திருக்கேன்…. ’ தாஜ்நுர் இசையில் துள்ளாட்டம் போட்ட சேலம்!
உழவன் தாத்தா வந்திருக்கேன்
உழவன் தாத்தா வந்திருக்கேன்
அறிவை வாங்கி பரிமாறு
அழிவை நோக்கி போராடு
உரமான உடலோடு
உரமில்லா பயிரோடு…
என்று தொடங்குகிறது அந்த பாடல்.
தாஜ்நுரின் மயக்கும் இசையில் ஈசன் இளங்கோவின் ஈர்க்கும் வரிகளில் வேல்முருகனின் உருக்கும் குரலில் சேலம் மாநகரமே இந்த பாடலுக்கு ஆட்டம் போட, பொங்கல் திருவிழா அமர்க்களமாக அரங்கேறியது. இதுவரை பொங்கல் தினத்தன்று சினிமா பாடல்களை மட்டும் ஒலிபரப்பி அதற்கு ஆட்டம் போட்டு வந்த பலரும், இது என் பாட்டு என்கிற சந்தோஷத்தோடு ஆடிப் பாடினர். இப்படியொரு பாடல் உருவாக காரணமாக இருந்த ஈசன் இளங்கோ என்ன சொல்கிறார்?
சமீபத்தில்தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை பறிகொடுத்தோம். அந்த ஒரு காரணத்தாலேயே இந்த பொங்கல் ஒருவகையில் துக்ககரமானது என்றாலும், நம்மாழ்வாரின் பணிகளை ஒவ்வொருவரும் தொடர வேண்டும் என்ற வேட்கை மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது. அவரையே உழவன் தாத்தாவாக ஒவ்வொருவரும் நினைத்து வழிபட வேண்டும். இனி வரும் காலங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி, காந்தி தாத்தா மாதிரி எங்கள் நம்மாழ்வாரும் உழவன் தாத்தவாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக ஒரு பாடலை நானும் மருத்துவர் சசியும் இணைந்து எழுதினோம்.
எங்கள் சேலம் மண்ணை சேர்ந்த தாஜ்நுர் சென்னையில் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். அந்த பாடலை செல்போனிலேயே அவரிடம் படித்துக் காட்டினேன். என் ஆசையையும் அவரிடம் சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இதை பாடலாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். வேல்முருகன் குரலில் கம்பீரமாக வந்திருந்த அந்த பாடல்தான் இன்று சேலம் நகர் முழுவதும் திரும்ப திரும்ப ஒலிபரப்பப்பட்டது. தமிழர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தோற்றத்தில் பலருக்கும் மேக்கப் போட்டு தெருக்களில் உலவ விட்டோம். நம்மாழ்வார் தாத்தா குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இனிப்பு வழங்கினார். தாரை தப்பட்டை மேளங்கள் முழங்க அவரை வீதி வீதியாக அழைத்து சென்றோம். சேலம் நகரில் எங்கு திரும்பினாலும் ஒலித்த இந்த உழவன் தாத்தா பாடல் இனி உலகத் தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை என்றார் ஈசன் இளங்கோ.
பாடலை ஒருமுறை யார் கேட்டாலும் அதை ஒலிக்க விட்டு ஆடப்போவது நிச்சயம்.
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும் pongal song1 (1)
Salem celebrates Esan Ilango’s Uzhavan Thatha song with Pongal festivities
Esan Ilango made Salem people to celebrate this Pongal with festivities and fervour. Esan was depressed at the sudden demise of scientist Nammazhvar of Salem some time ago. However the influence the late scientist had in his heart pushed him to do something unique while at the same time make people to carry out the unfinished jobs of the scientist.
Esan along with his doctor friend Sasi, wrote a poem commemorating the ideals of late Nammazhvar and take up the responsibility to carry on the unfinished jobs left by the late scientists. The lines go like this… Uzhavan Thatha Vandhirukken, Uzhavan Thatha Vandhirukken, Arivai Vangi Parimaru, Azhivai Nokki Poradu, Uramana Udalodu, Uyirilla Payirodu…..
He contacted music composer Taj Noor who hails from Salem, over phone and read the lyrics written by him and Sasi. He also explained his anguish to make the song popular amongst people of Salem initially, and through them to the Tamil world. Taj Noor obliged him and sent the composed song in one hour’s time. Immediately he made Velumurugam to sing the song with emotions.
He dressed few people on the likes of Nammazhvar and made them round across Salem distributing sweets on Pongal day, while the song was aired simultaneously.
Esan expressed his hope, like how Salem people embraced the song with both hands, the World Tamil population should also reverberate the song all over the world.
Please click here to hear the song pongal song1 (1)