‘ஊடகங்களின் வளர்ச்சியை தட்டி வைங்க…’ வைரமுத்து எச்சரிக்கை!

‘லஜ்ஜாவதியே…’ பாடலை மறக்காதவர்கள் அப்பாடலுக்கு இசையமைத்து பாடிய ஜாஸிகிஃப்ட்டையும் மறந்திருக்க முடியாது. மலையாள இசையமைப்பாளரான இவரை ஏதோ இப்போதுதான் அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்தினார்கள் ‘ஈர வெயில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில். அதையும் பொறுத்துக் கொண்டு ஸ்டேஜில் அமர்ந்திருந்தார் அவர். ஈரம் வெற்றிப்படம். வெயில் வெற்றிப்படம். அவ்விரண்டு வெற்றியும் இப்படத்திலும் அமைய வேண்டும் என்றார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா. சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட பலரும் ஸ்டேஜில் இருக்க வழக்கம் போல வைரமுத்துவின் ஆளுமை அந்த மேடையை அப்படியே தன் வசம் வைத்திருந்தது.

இப்படத்திற்கு பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. மேடையில் பேசிய முக்கியஸ்தர்கள் சிறு படங்களுக்கும் அவர் பாடல் எழுதி தருவது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூற, கம்பீரமாக மைக்கை பிடித்தார் வைரமுத்து. எனக்கு ஷங்கரும் ஒன்றுதான் இந்த படத்தின் டைரக்டருக்கும் ஒன்றுதான் என்று கூற பலத்த கைத்தட்டல்.

அப்படியே ஒரு சம்பவத்தை சொன்னார் அவர். நான் ராவணன் படத்திற்கு பாடல் எழுதியிருந்தேன். அதே படத்தை இந்தியிலும் எடுத்தார்கள். அங்கே பாடல் எழுதியவர் பிரபல இந்தி கவிஞர் குல்சார். இவ்விரு பாடல்களையும் உட்கார்ந்து அலசி ஆராய்ந்தது ஒரு குழு. கடைசியில் மணிரத்னத்திடம் இந்தி பாடல்களை விட தமிழில் எழுதப்பட்ட வரிகள்தான் அருமை என்றார்களாம். இந்த விஷயத்தை என் காதுகளுக்கு கொண்டு வந்தார்கள். நான் அப்போது அவர்களிடம் சொன்னேன், என்னை விட சிறந்த கவிஞர் குல்சார். ஆனால் இந்தியை விட சிறந்த மொழி தமிழ். அதனால்தான் இந்த பாடல்கள் நன்றாக இருக்கிறது என்று.

அப்படியே ஊடகங்களின் தாக்கத்தையும் கொஞ்சம் கண்டித்துவிட்டு போனார் அவர். இப்போது ஊடகங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது. நான் மாட்டு வண்டியில் ஏறிப் போய் மாட்டுக்கார வேலன் படம் பார்த்தேன். எங்கள் ஊரில் வயலுக்கு போய்விட்டு வந்து குளித்துவிட்டு மட்டமான பவுடர் ஒன்றை முகத்தில் அடித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு போவார்கள். இப்போது எல்லாமே போய்விட்டது. படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்தை முதலில் ஒரு லட்சம் பேர் பார்த்தால், அதே ஹீரோ நடித்து வெளிவரும் அடுத்த படத்தை பார்க்க வரும் எண்ணிக்கை 80 ஆயிரமாக குறைகிறது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான்.

இப்போது செல்போனிலேயே படம் பார்த்துவிட முடிகிறது. இணையதளங்கள் பெருகிவிட்டன. இவற்றையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் சினிமா அழிந்துவிடும். சினிமாவை வாழ வைத்த ஊடகங்களே அதை அழிக்கவும் செய்கிறது. தண்ணீரில் உயிர் வாழும் மீன்கள் எப்படி கொதிக்கும் தண்ணீரில் சமையல் ஆகிறதோ அப்படிதான் இதை பார்க்கிறேன் என்று பலத்த எச்சரிக்கை விடுத்த வைரமுத்து, தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு ஏதாவது முடிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது என்றார்.

நாள்தோறும் வளர்கிற விஞ்ஞானத்தை அடக்கி எப்படி நமக்கு சாதமாக்கிக் கொள்ள வேண்டுமோ, அப்படி சாதகமாக்கிக் கொள்வதுதான் அழகு என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார் கமல். அவரது உற்ற நண்பரான வைரமுத்து ஊடங்களுக்கே உலை வைக்க வேண்டும் என்ற ரீதியில் பேசியிருப்பது ஆச்சர்யமின்றி வேறென்ன?

Lyricist Vairamuthu bats for reigning of electronic media

Electronic media includes TV channels, news channels, social network and internet is the live-wire for anyone in today’s condition. They have given immeasurable freedom to common man to express himself and to air his or her opinion freely, which otherwise would not be possible without the social network and other modes of electronic media.

Lyricist Vairamuthu who participated in the audio launch of Eera Veyil was invited to share his thoughts on the occasion. Vairamuthu began by saying for him the personalities are not important but the work is important. He also said he is being praised mainly because of the greatness of the Tamil language. Then he opened up with a fiery speech about the electronic media. He said the electronic media has spoiled the people going to theatres to watch the movies. They have outgrown themselves and got to be reined in, in order to save the film industry. He made a plea to the Producers’ Council to consider doing something to have a control over the modes of electronic media.

Well! On the one hand Ulaganayagan Kamal propagates to embrace the technology to make a better living condition, his friend Vairamuthu’s words contradicts Kamal’s views. Is it not surprising?

By the way it is pertinent to note that even Courts and governments around the world are finding it difficult to have a control over the social networking sites and TV and news channels. Governments of China and Pakistan make relevant examples here.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜீவாவுக்கு நோஸ்கட் கொடுத்த அழகுராஜா ராஜேஷ்!

லேசாக கல் தடுக்கினால் கூட போதும், தடுமாறும் யாரையும் தலைக்குப்புற தள்ளிவிட்டுதான் வேடிக்கை பார்க்கும் கோடம்பாக்கம். அதுவரை பழகிய நட்பெல்லாம் உடைந்து போன அப்பளமாகி பல் இளித்துக்...

Close