ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீ திவ்யாவுக்கு ஜி.வி.பிரகாஷைதான் பிடிக்குமாம்….

‘ஊதா கலரு ரிப்பனுக்கு’ மாடர்ன் டிரஸ் மாட்டிவிட்டிருந்தார்கள். நாம் முன்பு பார்த்த கிராமத்து தேவதைக்கும் இந்த சிட்டி சின்ரெல்லாவுக்கும்தான் எவ்வளவு பெரிய வித்தியாசம்! வருத்தப்படாதீங்க வாலிபர்களே… இது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ படத்திற்காகவாம். நான் ஜி.வி.சாரோட ரசிகை. இந்த வாய்ப்பு கிடைச்சதை என்னால மறக்கவே முடியாது என்றார் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கு பிறகு மானமிகு மன்சூரலிகானில் துவங்கி மரியாதை மிகு சசிகுமார் வரைக்கும் இவரை நடிக்க அழைத்ததாக கேள்வி. கதைதான் வாழ வைக்கும் என்பதை கருத்தாக உணர்ந்து கொண்ட ஸ்ரீதிவ்யா நாற்பது லட்சம் சம்பளத்தை காட்டிய பின்பு ஒப்புக் கொண்ட படமாம் இது.

கவுதம் மேனன் படங்கள் பலவற்றில் அவருக்கு அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய மணி நாகராஜ் இயக்குகிறார்.. நான் ஜி.வி.பிரகாஷ் சார் ரெக்கார்டிங்ல பாடும்போது கேட்டிருக்கேன். அவ்வளவு ஃபீலிங்கா பாடுவாரு. அவருக்குள் ஒரு நடிகன் இருக்கான்னு தெரியும். என் படத்தை துவங்கறதுக்கு முன்னாடி அவரையே நடிக்க வச்சா என்னன்னு தோணுச்சு. கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. இந்த படம் ஒரு ஸ்கூலில் நடக்கிற விஷயத்தை மையமா கொண்டது. த்ரில்லர் டைப்பான கதை. இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை யாருமே தொட்டதில்ல என்றார் மணி. ஏன் இந்த படத்திற்கு பென்சில்னு ஒரு தலைப்பு? யாரும் கேட்காமலேயே விளக்கம் சொல்ல ஆரம்பித்தது அவரது கடமையுணர்வு.

ட்வெல்த் வரைக்கும் பென்சில் ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கும். அதுமட்டுமல்ல, எழுதிய பிறகும் தேவைப்படும்போது அழிசுக்கலாம். அதனால்தான் இந்த தலைப்பு வச்சோம் என்றார். ‘இந்த படத்துல யாரு பென்சில்? யாரு ரப்பர்?’ போன்ற மொக்கை கேள்விகளையெல்லாம் தாண்டி, உருப்படியான ஒரு கேள்வி எழுந்தது பிரஸ்மீட்டில். இப்போ ஸ்கூல் யூனிபார்ம் போட்ட பசங்களோட லவ்வை சினிமாவில் காட்டக் கூடாதுன்னு ஒரு நிர்பந்தம் இருக்கே, அது உங்களுக்கு தெரியுமா?’

‘அப்படியா ?’ என்ற மணி, ‘இந்த படத்தில் ஒரு பேக்ரவுண்டுக்காகதான் ஸ்கூல் தேவைப்பட்டுச்சு. மற்றபடி படிப்பு, படிக்கிற வயசுல நடக்குற தப்புன்னு எதையும் நாங்க காட்டல’ என்றார்.

அதுதான் நிஜம்னா படம் குறித்த எல்லா கேள்விகளையும் ரப்பர் வச்சு அழிச்சுட்டு காத்திருக்கோம். சீக்கிரம் வாங்க பிரதர்…

The story of Pencil has not been handled by anyone – Director Mani Nagaraj

Music composer GV Prakash will be debuting as actor in Pencil for which Sri Divya has been roped in to play the lead opposite to GV. She will be seen in a completely urban image in the film. The film is directed by Mani Nagaraj, who assisted Gautham Menon in his earlier films.

Speaking about GV, the director Mani Nagaraj said that he had observed GV on several occasions, while he composed songs and he used to sing the songs with complete emotions. Impressed, he thought he would make a good actor and met him with the story. GV liked the story and gave his consent to don the grease paint, said Mani. “The film will be a suspense thriller that happens in a school. No one has handled such a subject earlier”, said the director. “Pencil is an important tool for students till 12th std. Also with pencil whatever you write can be erased and rewritten. The story deals with such an important issue, we have chosen the title Pencil” revealed the director Mani Nagaraj. The film does not deal with education or adolescence. School back ground is being shown only because the story happens there, revealed the director.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘பக்கத்துல ஜால்ராக்களை வச்சுக்காதீங்க…’ விஜய் சேதுபதிக்கு டைரக்டர் ஆலோசனை!

இதை அறிவுரையாக எடுத்துக் கொண்டாலும் சரி, ஆலோசனையாக எடுத்துக் கொண்டாலும் சரி. சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்திருக்கலாம். தனக்கேயுரிய பாணியில் போட்டு தாக்கிவிட்டார் டைரக்டர்...

Close