ஊதாக் கலரு ரிப்பன் வீட்டில்… ஒரு சாதாக் கலரு ரிப்பன்?!!!

ஊதா கலரு ரிப்பனுக்குதான் ஒரேயடியாக மவுசு இப்போது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அதிகாரபூர்வமான அழகியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீ திவ்யாவுக்கு திரும்பிய இடமெல்லாம் செல்வாக்கை தந்தது அந்த ஊதாக் கலருதான். முன்னணி ஹீரோக்களே கூட, ‘பொண்ணு யாருய்யா?’ என்று விசாரிக்கிற அளவுக்கு கொட்டி வச்ச மல்லிப்பூவாக திரியும் ஸ்ரீதிவ்யாவுக்கு வீட்டிலேயே போட்டிக்கு இன்னொரு சாதா கலரு ரிப்பனும் இருப்பதுதான் ஆச்சர்யம்.

என்னது ஊதா வீட்டுல இன்னொரு சாதாவா? யெஸ்… அந்த படமும் ஓடியிருந்தால் இப்படியொரு சாதாரண வார்த்தை கொண்டு வர்ணித்திருக்கவே தேவையிருந்திருக்காது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஹீரோயினான ஸ்ரீதிவ்யாவின் செல்ல தங்கச்சிதான் ஸ்ரீரம்யா. யமுனா படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் ரம்யா. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இருந்தாலும் அக்கா படு ஸ்டிராங்கான ஒரு நாற்காலியை பிடித்திருப்பதில் தங்கச்சிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இப்போதும் கெட்டுப் போகவில்லை, தங்கச்சி ரம்யாவுக்கு நல்ல வாய்ப்பை வழங்கினால், அக்கா திவ்யா ரெண்டு சீனு சும்மாவே நடிச்சுக் கொடுக்க தயாராக இருக்கிறாராம். ரெண்டு ரிப்பனையும் தட்டிகிட்டு போற அதிர்ஷ்டசாலிங்க க்யூவுல நிற்கலாம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கைகழுவிய டைரக்டர், கைகொடுத்த கமல்! -ரிட்டர்ன் பேக் அபிராமி…

ஒருகாலத்தில் ரசிகர்களை அபிராமி... அபிராமி என்று புலம்ப வைத்த நடிகை அபிராமி முன்னணியில் இருக்கும் போதே பின்னணி தெரியாமல் காணாமல் போனார். அவரது அழகையும் நடிப்பையும் சொல்ல...

Close